"விமானத்துல இருக்கேன்.. ஆனால் எமெர்ஜென்சி எக்சிட்டை திறக்க மாட்டேன்".. வைரலாகும் எம்பி தயாநிதிமாறனின் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக நாடளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமானத்தில் பயணித்தபடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பற்றித்தான் சமூக வலை தளங்களில் தற்போது பேச்சாக இருக்கிறது. அந்த வீடியோவில் அவர் “வணக்கம். வாழ்க தமிழ்நாடு, நான் கோயம்புத்தூர் செல்ல இண்டிகோ விமானத்தில் எமர்ஜென்ஸி எக்ஸிட் அருகே தற்போது அமர்ந்திருக்கிறேன். ஆனால் நான் இந்த எமர்ஜென்ஸி எக்ஸிட்டை திறக்கபோவதில்லை. ஏனென்றால் அதை திறப்பது விமானத்திற்கும் விமான பயணிகளுக்கும் பாதுகாப்பானது அல்ல."

"மேலும் அப்படி திறக்காமல் இருப்பதால் அது நேரத்தை மிகவும் சேமிக்கும். அதுமட்டுமில்லாமல் நான் பிறகு மன்னிப்பு கடிதம் எழுதவேண்டியதில்லை. மேலும், அந்த கதவை திறப்பதால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும். சுய அறிவு உள்ளவர்கள் யாரும் இந்த காரியத்தை செய்யமாட்டார்கள். அத்துடன் எனக்கு மட்டுமில்லாமல் அனைத்து பயணிகளுக்கும் பயண நேரம் 2 மணிநேரம் மிச்சமாகும். இதை அனைவரும் கடைபிடிப்பார்கள் என நம்புகிறேன்" என கூறியுள்ளார். மேலும், தனது பதிவில் தேஜஸ்வி சூர்யாவையும் டேக் செய்திருக்கிறார் தயாநிதி மாறன்.

விமானத்தில் பயணித்தபடி தயாநிதி மாறன் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணம் செய்திருந்தனர். அந்த விமானம் சென்னையில் இருந்து திருச்சி புறப்படும்போது விமானத்தின் அவசரக்கால கதவை தேஜஸ்வி சூர்யா திறந்ததாகத் தகவல் வெளியாகி சர்ச்சையானது.

பின்னர் இதுதொடர்பாக சமீபத்தில் பேசியிருந்த தேஜஸ்வி சூர்யா விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்பட்டதுக்கு மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

DAYANIDHI MARAN, EMERGENCY EXIT, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்