சென்னை அருகே ‘பயங்கரம்’!! - ரவுடிகளுடன் மோதல்.. ‘திமுக’ எம்.எல்.ஏ-வின் தந்தை நடந்திய ‘துப்பாக்கி சூடு’... படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதி! - ‘அதிர்ச்சி’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.முக. எம்.எல்.ஏ இதயவர்மன். இவருடைய தந்தையும் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவருமான லட்சுமிபதி, திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார்.

இதே ஊரைச் சேர்ந்த இமயம் குமார் என்பவருக்கும் இவரது குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், செங்கோடு கிராமத்தில் இருக்கும் சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னைக்காரர்களுக்கு இமயம்குமார் விற்றுத் தந்துள்ளார். இதனால் அந்த நிலத்துக்கு செல்ல வேண்டி, அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதற்கு எம்.எல்.ஏ இதயவர்மனின் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க, இந்நிலத்தை பார்வையிட, இமயம் குமார், சில சென்னைக்காரர்களுடன் சங்கோதி அம்மன் கோவில் இருக்கும் செங்காடு பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதிக்கும், இமயம்குமாருக்கும் இடையே, நில ஆக்கிரமிப்பு தொடர்பான வாக்குவாதம் முற்றியதில் இமயம்குமாரின் தரப்பு சென்னைக்காரர்கள் எம்.எல்.ஏவின் தந்தை லட்சுமிபதியையும், அவரது உறவினர் குருநாதன் உள்ளிட்டோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின்போது பாதுகாப்புக்காக, தான் வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி லட்சுமிபதி சுட, அந்த துப்பாக்கி குண்டு அவ்வழியாக சென்ற தையூர் கீரை வியாபாரி சீனிவாசன் என்பவர் மீது பாய்ந்தது. இதேபோல் எம்.எல்.ஏ இதயவர்மனும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

இதனால் சீனிவாசன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், லட்சுமிபதி மற்றும் குருநாதன் உள்ளிட்டோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், இரு தரப்பினரும் வாகங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் இதயவர்மன் மற்றும் அவரது தந்தையை கைது செய்ததுடன், மருத்துவமனையில் இருக்கும் லட்சுமிபதியின் துப்பாக்கியை பறிமுதல் செய்து, அதன் உரிமம் பற்றியும், நடந்த சம்பவத்தை பற்றியும் விரிவாக விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்