40 ஆண்டுகளுக்கு பிறகு கோபிச்செட்டிபாளையத்தில் கால் பதித்த திமுக..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

Advertising
>
Advertising

திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.. கள்ளக்குறிச்சியில் ஒட்டு எண்ணிக்கையை தற்காலிகமாக நிறுத்திய அதிகாரிகள்..!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தேர்தல் நிலவரம்

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. ஏற்கனவே தனக்கு செல்வாக்கு இருக்கும் இடங்கள் மட்டுமல்லாது அதிமுக கோட்டை  அழைக்கப்படும் கோவை, கோபிச்செட்டி பாளையம் ஆகியவற்றிலும் திமுக வெற்றி பெற்று இருப்பது அந்தக் கட்சியினரை மகிழ்ச்சி பெற வைத்திருக்கிறது.

40 ஆண்டுகளுக்கு பிறகு கோபியில் திமுக வெற்றி

கோபிச்செட்டிப்பாளையம் 30 வார்டுகளில் திமுக கூட்டணி 16, அதிமுக 13, சுயேச்சை ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் கோபியை கைப்பற்றி இருக்கிறது திமுக. 40 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கோபிச்செட்டி பாளைய நகராட்சியை கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

தொண்டாமுத்தூரிலும் திமுக வெற்றி

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் திமுக வென்றுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவையில் 10 சட்டசபை தொகுதியிலும் திமுக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் எஸ் பி வேலுமணியின் சொந்த தொகுதியில் திமுக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக கைப்பற்றி இருக்கிறது. அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நகராட்சியையை பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 138 இடங்களில் திமுக 133 இடங்களிலும் அதிமுக 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழகத்தில் உள்ள 489 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி 427 இடங்களிலும் 16 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வேட்பாளர்.. !

TAMILNADU ELECTION RESULTS, DMK MARK A VICTORY, KOBICHETTIPAALAYAM, திமுக, கோபிச்செட்டிப்பாளையம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்