அடுத்த 'சென்னையாக' மாறப்போகும் கோவை...! - 'அடுக்கடுக்கான' முதலமைச்சரின் திட்டங்கள்...! - வேகமெடுக்கும் கோவையின் வளர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் பத்து இடங்களில் ஒன்று கூட ஜெயிக்கவில்லை. அந்த அளவிற்கு அதிமுக கோட்டையாக கொங்கு மண்டலம் காணப்படுகிறது. ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் மட்டுமே பெருவாரியாக ஜெயித்துள்ளனர்.
இந்த நிலையில், மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடத்த அரசு தரப்பில் திட்டமிடப்பட்டது. அந்த விழாவை நடத்த செந்தில் பாலாஜியிடம் முழு பொறுப்பை வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
விழாவை முன்னிட்டு முதல்வர் படம் இல்லை. பேனர் இல்லை. தோரணங்கள் இல்லை. ஆனால் 10கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். இது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று நினைத்தால் இது ஒரு மாநாடு அளவிற்கு நடந்துள்ளது என முதல்வர் ஸ்டாலினே அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டினார். இந்த பிரமாண்டமான விழா டிரெண்டிங் ஆகியுள்ளது.
முன்னதாக கோவை வருவதையொட்டி முதல்கட்டத்தில் பாஜகவினர் #gobackstalin என ஹேஷ்டேக் மூலம் டிரெண்டாக்கிய நிலையில், உஷாரானா திமுகவினர் #welcomestalin என பதிலுக்கு டிரெண்ட் செய்தனர். இது இந்திய அளவில் வைரலானது. கோவை திருப்பூரில் பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்க மநீமவில் இருந்து வந்த மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது.
மேலும், கொங்கு மண்டலத்தில் மெட்ரோ உள்ளிட்ட அடுக்கடுக்கான பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையை போன்று கோவையை மாற்றுவதற்கான வளர்ச்சி திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
VIDEO: ‘தட்டிக்கொடுத்து பாராட்டிய டிராவிட்’.. யார் இவர்..? கடைசி டி20 போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..!
தொடர்புடைய செய்திகள்
- 'கான்வாய்ல இத கட் பண்ணுங்க'...'இப்படி ஒரு அசத்தல் அறிவிப்பா?'... 'முதல்வர் ஸ்டாலின்' எடுத்த அதிரடி முடிவு!
- 'பேரிடியாய் வந்த செய்தி'... 'ஓபிஎஸ் மனைவி காலமானார்'... சென்னை மருத்துவமனையில் பிரிந்த உயிர்!
- 'Audi கார்ல எப்படி ஏர் பேக் வேலை செய்யாம போச்சு'?... 'சுக்குநூறாக தெறித்த கார்'... 'தி.மு.க. எம்.எல்.ஏ மகனுக்கு நேர்ந்த பரிதாபம்'... CCTV காட்சிகள்!
- ரெய்டு நடக்கப்போவது வேலுமணிக்கு முன் கூட்டியே லீக் செய்யப்பட்டதா?.. யார் அந்த கருப்பு ஆடு?.. செம்ம ட்விஸ்ட்!
- திடீர் டெல்லி பயணம்!.. பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?.. பின்னணி என்ன?
- மறைந்தார் மதுசூதனன்!.. நொறுங்கிப் போன அதிமுக தொண்டர்கள்!.. இவர் கடந்து வந்த பாதை என்ன?
- 'அரசியலுக்கு 'ரெஸ்ட்' கொடுத்த... அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்'!.. ஏன் இந்த திடீர் முடிவு?
- 'சீட்டில் அமர்ந்துகொண்டே மனுவை வாங்கிய ஆட்சியர்'!.. கடுப்பான அதிமுக எம்.எல்.ஏக்களால் முற்றிய வாக்குவாதம்!.. கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
- முதல் தடவையா 'நம்ம கட்சி' ஆளுங்களே எனக்கு 'துரோகம்' பண்ணிட்டாங்க...! - 'சட்டசபை தேர்தல்' குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து...!
- 'பச்ச துரோகம்'!.. 'சார்பட்டா' திரைப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு!.. இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு கண்டனம்!