கொரோனா பாதிப்பு... மருத்துவமனை சிகிச்சை... 'தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கு'?.. சுதீஷ் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து சுதிஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்புவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சுதிஷ் தெரிவித்துள்ளார். இதனால், தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்