'தேமுதிகவிற்கு இன்னைக்கு தான் தீபாவளி'... 'அதிமுக டெபாசிட் கூட வாங்காது பாருங்க'... எல்.கே. சுதீஷ் பரபரப்பு பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகிய நிலையில், எல்.கே. சுதீஷின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. தே.மு.தி.க. சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ஜெயலலிதா ஒதுக்கியது போன்று 41 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தரப்பில் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதனை அ.தி.மு.க. தலைமை ஏற்கவில்லை.
இதற்கிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், அதிமுக கூட்டணியில் பா.ம.க. வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து தே.மு.தி.க. தரப்பில் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பல கட்டங்களாக அ.தி.மு.க., தே.மு.தி.க. தலைவர்கள் சேர்ந்து பேசினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தே.மு.தி.க.வினரை நேரில் அழைத்துப் பேசினார். தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அ.தி.மு.க. தரப்பில் தே.மு.தி.க. வலியுறுத்திய 23 தொகுதிகளை ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
13 முதல் 15 இடங்கள் வரையில் மட்டுமே தரமுடியும் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மாவட்டச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து, அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கூறியதாவது:
‘‘அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியதால், இன்று எங்கள் அனைவருக்கும் தீபாவளி. அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.வை வீழ்த்த தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. தொண்டர்கள் பணியாற்றுவார்கள். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பா.ம.க.வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டையும் எல்.கே. சுதீஷ் முன்வைத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தயாராகும் தேர்தல் அறிக்கை...' 'தேர்தல் பணிகள் குறித்து...' - தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை...!
- 'வேகமெடுக்கும் வேட்பாளர் தேர்வு'... 'தயாராகும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்'... அதிமுக தலைமையகத்தில் தீவிர ஆலோசனை!
- 'நீண்டு கொண்டே சென்ற பேச்சுவார்த்தை'... 'நள்ளிரவில் நடந்த கையெழுத்து'... 'பாஜகவுக்கு 20 தொகுதிகள்'... நடந்தது என்ன?
- ‘கேரள சட்டமன்ற தேர்தல்’!.. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம்’.. கேரள பாஜக தலைவர்..!
- ஓட்டுப் போட வரும்போது ‘இதை’ மட்டும் எடுத்துட்டு வர மறந்துராதிங்க.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!
- விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர்..!
- சட்டமன்ற தேர்தலில் சென்னையில் களமிறங்கும் ராதிகா சரத்குமார்?.. எந்த தொகுதி தெரியுமா..?
- சட்டமன்ற தேர்தலில் யாரெல்லாம் ‘தபால் ஓட்டு’ செலுத்த முடியும்..? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!
- ‘தமிழ்நாட்டிலேயே இதுதான் பெஸ்ட் டீ’!.. மாஸ்டரை பாராட்டிய ராகுல்காந்தி.. எங்கே தெரியுமா..?
- தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்..? ஏபிபி நியூஸ், சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு..!