தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கு?.. MIOT மருத்துவமனை அதிகாரப் பூர்வ அறிவிப்பு!.. விரைவில் குணம் பெற முதல்வர் பழனிசாமி வாழ்த்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக MIOT மருத்துவமனை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதற்கிடையே, இன்று காலை தேமுதிக நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை MIOT மருத்துவமனை தற்போது வெளியிட்ட அறிக்கையில், "தேமுதிக நிறுவனத்தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு.விஜயகாந்த் அவர்களுக்கு கோவிட்-19 சோதனையில் கொரோனா தொற்று இருப்பது 22 செப்டம்பர் 2020 அன்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது, அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது.
அவர் கூடிய விரையில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முதல்வர் பழனிசாமி, "தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், திரு.விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன்.
திரு.விஜயகாந்த் அவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்கு பெருமிதம்!.. மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து!.. அடுத்த அதிரடியில் இறங்கிய சீரம் நிறுவனம்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- "போன வருஷம் கூட மகாபலிபுரத்த பார்த்தீங்க.. அத நெனைச்சு பாருங்க!".. பிரதமருக்கு 'பறந்த' தமிழக முதல்வரின் 'பரபரப்பு' கடிதம்!
- "அடுத்த 6 மாசம் அள்ளு விடப் போகுது!.. முடிஞ்சா இத பண்ணுங்க".. 'மீண்டும்' வேலையை காட்டும் 'கொரோனா'!.. அப்படியே 'அந்தர் பல்டி' அடித்த 'நாடு'!
- "ஸ்டார்ட் ஆயிடுச்சு.. இது அதுதான்!".. கொரோனா தாக்கம் குறித்த முக்கிய எச்சரிக்கை விடுத்த கனடா சுகாதார இயக்குநர்!
- 'இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள்ல இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!!'.. நாட்டு மக்களை எச்சரித்த சுகாதார செயலர்!
- பிசிஆர் ‘நெகட்டீவ்’னு வந்தா கொரோனா ‘இல்லை’னு அர்த்தமில்லை.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- 'குறைஞ்ச விலையில கொரோனா டெஸ்ட் பண்ணிக்கலாம்!'.. புழக்கத்துக்கு வரும் புதிய கருவி இதுதான்!
- 'அரக்கப்பரக்க ஓட வேண்டாம்'... 'வீட்டிற்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள்'... அதிரடியாகத் தொடங்கி வைத்த முதல்வர்!
- 'சென்னை மக்களே இவரை நியாபகம் இருக்கா'... '30 வருசமா யாராலும் சிரிக்க வைக்க முடியல'... சிலை மனிதருக்கு கொரோனாவால் பறிபோன வேலை!
- கோவையில் மேலும் 568 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?