‘தலைவா நீங்கதான் பெயர் வைக்கணும்’!.. பிரச்சார வாகனத்தில் வந்த விஜயகாந்த்.. உற்சாகத்தில் தேமுதிக தொண்டர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேமுதிகவின் கொடி நாளையொட்டி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கொடி ஏற்றி வைத்தார்.

தேமுதிகவின் கொடி நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று கொடியை ஏற்றி வைத்தார். தேமுதிக கடந்த 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-ம் தேதி தேமுதிகவினரால் கொடி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று காலை தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த், அவரது இல்லத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து அக்கட்சியின் துணைச் செயலாளர் இல்லம் அமைந்துள்ள சாலிகிராமத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

இதனை அடுத்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொடி ஏற்றினார். பின்னர் அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் திறந்த வாகனத்தில் வந்து அனைவரையும் சந்தித்ததால், அவரது தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

அப்போது இரு தொண்டர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு பெயர் வைக்குமாறு விஜயகாந்திடம் கேட்டனர். உடனே ஒரு குழந்தைக்கு ஜனனி என்றும், மற்றொரு குழந்தைக்கு தனது பெயரையும், மனைவியின் பெயரையும் இணைத்து விஜயலதா என பெயர் சூட்டினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்