'தீபாவளி பண்டிகைக்கு'... 'சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போறீங்களா???'... ‘சிறப்புப் பேருந்துகள் எப்போது, எங்கிருந்து செல்லும் தெரியுமா??... வெளியான அறிவிப்பு...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அடுத்த வாரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தற்போது கொரோனாவால் மக்கள் தனது சொந்த ஊர்களில் இருந்தாலும், கொரோனா ஊரடங்கு தளர்ந்தப் பின்னர், தத்தமது பணிபுரியும் ஊர்களுக்கு சொந்த ஊரிலிருந்து குறைந்த அளவிலான மக்கள் திரும்பி வந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையானது வருகிற 14 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், கொரோனா  பாதுகாப்பு நடவடிக்கையுடன் குறைந்த அளவிலான சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 11-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

கடந்த ஆண்டு 18,544 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 14,757 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட உள்ளது. வழக்கம் போல சென்னையில் 5 இடங்களில் இருந்து தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 13  முன்பதிவு மையங்களில் இதுவரை 27 ஆயிரம் பேர் தீபாவளிக்கு வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளிக்குப்பிறகு நவம்பர் 15, 16, 18 தேதிகளில் மீண்டும் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்மையில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் புதுச்சேரிக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்