'தீபாவளிக்கு எந்தெந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்???'... 'வெளியான தமிழக அரசின் அறிவிப்பு...!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காலம் என்பதால், காற்று மாசு ஏற்பட வாய்ப்பு தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதித்து  ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணிமுதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடும்படி  அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள் எனவும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்