இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்றும் முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த மாதத்தில் ஆயுதபூஜை உள்ளிட்ட பல்வேறு விடுமுறை தினங்கள் வருவதால் அதனை ஈடுகட்ட சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பதாக பள்ளிக்கல்வித்துறை கூறியது.
எப்படியும் சனிக்கிழமை விடுமுறை நாளாக இருக்கும் என எதிர்பார்த்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்தது. இதனால் தீபாவளிக்குக் கூடுதல் நாட்கள் விடுமுறை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது பெற்றோர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 26ம் தேதி விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் தற்போது மகிழ்ச்சி நிலவிவருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லேப்டாப்' ஏன் தரல?.. கேள்வி கேட்ட 'மாணவனுக்கு'.. ஆசிரியரால் 'நடந்த' கொடூரம்!
- Watch Video: மொத 'பரிசு' யாருக்கு?.. குழம்பும் நெட்டிசன்கள்.. பதில் தெரிஞ்சா சொல்லுங்க!
- 'என்ன? 2 ஆயிரம் ரூபாய் கூட இல்லயா? 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு நண்பனிடம் அனுப்பிவைத்த பள்ளிச் சிறுவர்கள்!'
- “மாணவிகள்.. பெற்றோர்.. ஆசிரியர்கள்.. அத்தன பேரயும் ‘அந்த மாதிரி’ மார்ஃபிங் பண்ணியிருக்கேன்.. எவ்ளோ தருவீங்க?”.. 'மிரளவைத்த' பெண்!
- 'கம்ப்ளைண்ட்டா குடுக்குற?'.. '12 ஆசிரியர்கள்.. 10 மாணவர்கள் சேர்ந்து'.. சென்னையில் +1 மாணவிக்கு நேர்ந்த கொடுமை'!
- 'தீபாவளி' சிறப்பு பேருந்துகள் 'முன்பதிவு'...உங்க 'பஸ்' எந்த ஏரியான்னு தெரிஞ்சுக்கங்க!
- 'என்னோட இந்த திறமைக்கு இன்ஸ்பிரேஷனே இவர்தான்'.. வைரலாகும் வளரிளம் பெண்!
- 'இப்படியா நடக்கணும்'.. ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஆசையாக ஓடிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘பாடத்தை சரியாக ஒப்பிக்கவில்லை என’.. ‘ஆசிரியர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘10ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘நம்பிச் சென்ற பள்ளிச் சிறுவனிடம்’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..