‘தமிழகத்தில்’... ‘இந்த 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்’... ‘பாதிக்கப்படாத மாவட்டங்கள் எவை?... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 621 ஆக உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் விவரம் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில், 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகப்பட்சமாக சென்னை மாவட்டத்தில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவதாக கோவை மாவட்டத்தில் 59, திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேர் பாதிப்படைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டம் புதுக்கோட்டை , புதிதாக உதயமான தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு என்பது இதுவரை பதிவாகவில்லை என்று தெரிகிறது.

சென்னை - 110

கோவை - 59

திண்டுக்கல் - 45

திருநெல்வேலி -38

ஈரோடு - 32

திருச்சி - 30

நாமக்கல் - 28

ராணிப்பேட்டை - 25

செங்கல்பட்டு - 24

கரூர் - 23

தேனி - 23

மதுரை - 19

விழுப்புரம் - 16

கடலூர் - 13

சேலம் - 12

திருவள்ளூர் - 12

திருவாரூர் - 12

நாகப்பட்டினம் - 11

தூத்துக்குடி - 11

விருதுநகர் - 11

திருப்பத்தூர் - 11

திருவண்ணாமலை - 9

தஞ்சாவூர் - 8

திருப்பூர் - 7

கன்னியாகுமரி - 6

காஞ்சிபுரம் - 6

சிவகங்கை - 5

வேலூர்  - 5

நீலகிரி - 4

கள்ளக்குறிச்சி - 2

ராமநாதபுரம் - 2

அரியலூர் - 1

பெரம்பலூர் - 1

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்