தங்கச்சியோட இளநீர் கடை மேல அக்காவுக்கு இருந்த வன்மம்.. இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்.. இரக்கமே இல்லாமல் அக்கா புருஷன் வெறிச்செயல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை: மதுரையில் இளநீர் கடை வியாபரம் விரோதம் காரணமாக மச்சினிச்சியை தீர்த்துக் கட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertising
>
Advertising

இளநீர் கடை நடத்தி வந்த பெண்:

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் பிழைப்புக்காக இளநீர் கடை நடத்தி வந்த நிலையில் அதற்கு இடையூறு ஏற்படுத்தியதோடு  மட்டுமல்லாமல் சொந்த அக்காவின் கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருகருகே கடை போட்டு வியாபாரம்:

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு கலைவாணி (36 வயது), கலைச்செல்வி (34 வயது), முத்துலட்சுமி (30 வயது) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் ஆபீசர்ஸ் காலனியில் தனித்தனியாக கடைகள் போட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். கலைவாணி கம்பங்கூழ் விற்கும் கடை நடத்தி வருகிறார். கலைச்செல்வி ஜூஸ் கடை நடத்தி வருகிறார். முத்துலட்சுமி இளநீர் கடை வியாபாரம் செய்து வந்தார்.

அக்க, தங்கைகளுக்கு இடையே நடந்த வாக்குவாதம்:

இந்த நிலையில், முத்துலட்சுமியின் கணவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றுவிட்டார். எனவே அவர் தனது தந்தை சிங்கதுரையுடன் சேர்ந்து இளநீர் வியாபாரத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், ஒரு பகுதியில் கடைகள் இருப்பதால் தொழில் போட்டி காரணமாக அக்கா கலைச்செல்விக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. கடந்த பெப். 6-ஆம் தேதி மாலை கலைச்செல்வி, அவரது கணவர் நாகராஜ் ஆகியோர் சிங்கதுரையிடம் சென்று அங்கு இளநீர் கடை போடக்கூடாது என கூறி சண்டை போட்டுள்ளனர். உடனே முத்துலட்சுமி தன்னுடைய அப்பாவுக்கு ஆதரவாக நாகராஜிடம் வாக்குவாதம் நடத்தியுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த நாகராஜ் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் முத்துலட்சுமியை ஓங்கி தாக்கினார். இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அரசு மருத்துவமனை காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நாகராஜ், கலைச்செல்வி ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சகோதரியை வியாபார போட்டிக்காக அக்காவின் கணவரே தீர்த்துக்கட்டிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

TENDER COCONUT, MADURAI, மதுரை, இளநீர் கடை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்