"பப்ஜி மதன் பேச்சில் பாஃய்சன்".. "அவரை ஏன் வெளியில் விடவேண்டும்?".. கோபமடைந்த நீதிபதிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
>
Advertising

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து,  மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

புழல் சிறையில் மதன்

பின்பு அவரது மனைவி  கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர்.  பின்னர், அவரது மனைவி கிருத்திகாவை மட்டும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இந்த வழக்கில் ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதன் மற்றும் அவரது மனைவி மீதான குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்தனர். அதில், மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதான வழக்கில் மொத்தம் 32 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மனைவி கிருத்திகா மனு

பப்ஜி மதன் மீது மொத்தம் 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தநிலையில், மொத்தம் 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதுமட்டுமின்றி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ரூபாய் 2 ஆயிரத்து 848 நபர்களிடம் ரூபாய் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாகவும் காவல்துறை தரப்பில் மதன் மீது குற்றம் சாட்டப்பட்டது.  இதில் பெறப்பட்ட பணம் மூலமாகதான் இருவரும் இந்த இரண்டு ஆடி ரக கார்களை வாங்கியதாகவும் அந்த குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மதனின் மனைவி கிருத்திகா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "உடல் நிலையை காரணம் காட்டியே முன்கூட்டியே விசாரணை கோருகின்றனர்.  ஆனால் மதனின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளது.  ஃபிசியோதரப்பி சிகிச்சை மட்டுமே தேவைப்படுகிறது என தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதிகள் கூறியதாவது, "மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. அவரை ஏன் வெளியில் விட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

PUBG MADAN, KIRUTHIKA, GOONDAS ACT, YOUTUBE CHANNEL, CHENNAI HIGH COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்