'அந்த' யூடியூப் சேனலை 'ஸ்டாப்' பண்ணுங்க...! 'அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்...' - யூடியூப் நிறுவனத்திற்கு போலீசார் கடிதம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் VPN முறையில் சட்டவிரோதமாக அந்தவிளையாட்டை சிலர் விளையாடி வருகின்றனர்.

பப்ஜி விளையாட்டில் முழ்கிக்கிடக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டின் நுணுக்கங்களையும், எப்படி தந்திரமாக வெல்வது என்பதை முகத்தை காட்டாமல் ஆன்லைனில் விளையாடிக்கொண்டே விளக்குவது தான் மதன் யூடியூப் சேனல்.

ஆனால் பப்ஜி பற்றி பேசுவதை விட அந்தரங்கமும், பெண்களை பற்றிய ஆபாசமும் தான் அதிகம் பேசப்படுவதாக புகார் எழுந்தது.

ஆன்லைன் விளையாட்டில் வரும் மதன் ஆரவாரமாக கெட்டவார்த்தைகளை வெளிப்படையாக பேசுவதும், பெண்களை குறித்து இழிவாகப் பேசுவதும் பப்ஜி விளையாடும் சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிறைய பேர் அவரது வீடியோவை பார்த்தனர். மேலும் அவரது சேனலுக்கு பலர் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். இதன்காரணமாக மதன் யூடியூப் சேனலுக்கு வருவாயும் அதிகரித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டிற்கு வரும் சில பெண்களை குறிவைக்கும் மதன், உடனே அவர்களை இன்ஸ்டா பக்கத்திற்கு வரச்சொல்லி ஆடையில்லாமல் இரவில் வீடியோ சார்ட் செய்யலாம் என அழைக்கும் சில வீடியோக்களும் இணையத்தில உள்ளன.

இப்படி ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசும் மதன் யூடியூப் சேனல் மீது க்ரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார் கொடுக்கப்பட்டன. தன் மீது சொல்லப்படும் புகார்களுக்கு மதன் யூடியூப் சேனல் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டின் போது யூடியூப்பில் ஆபாசமாக பேசிய மதனின் யூடியூப் சேனல்களை முடக்க சென்னை போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்