வெளிநாட்டில் இறந்த கணவர்.. உடலை கேட்டு கதறும் மனைவி.. "இன்னும் எத்தனை அரியநாச்சிகள் வேண்டும்..??" - கொந்தளித்த க/பெ ரணசிங்கம் இயக்குனர்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவரின் மரண தகவல் கிடைத்ததை எடுத்து அவருடைய சடலம் கொண்டுவரப்பட வேண்டும் என திருச்சியைச் சேர்ந்த அன்னக்கிளி எனும் பெண் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது தொடர்பான செய்திகளை பகிர்ந்துள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டி இந்த செய்தி குறித்த தன்னுடைய ஆற்றாமையை பதிவு செய்துள்ளார். அவருடைய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | கடலுக்கு அடியில் மர்ம உயிரினம்.. "என்னன்னு தெரியாம ஒட்டுமொத்த டீமும் கெறங்கி போய் கெடக்கு"..

திருச்சி, வடக்கு சீதாம்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், அன்னக்கிளி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

அப்படி இருக்கையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பாக இவர் சவுதியில் வெல்டர் வேலைக்காக சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

வெளிநாட்டுக்கு சென்ற பிறகு தினமும் பலமுறை தனது மனைவி மற்றும் மகளுடன் செல்போன் மூலம் பேசும் சின்னமுத்துவின் செல்போன் சமீபத்தில் திடீரென ஸ்விட்ச் ஆப் என வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது, அவரது நண்பரின் செல்போனில் அன்னக்கிளி பேசிய போது சின்ன முத்து காணாமல் போனதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடும் அதிர்ச்சி தகவல் ஒன்றை அன்னக்கிளிக்கு சின்னமுத்துவின் நண்பர் தெரிவித்துள்ளார். அதாவது சின்னமுத்துவை மருத்துவமனையில் அனுமதித்தாக முதலில் கூறியிருந்த நண்பர், மீண்டும் தொடர்பு கொண்டு அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். கடந்த சில தினங்கள் வரை பேசிக் கொண்டே இருந்த கணவர், திடீரென இறந்து போனதாக அறிந்ததும் கதறித் துடித்துள்ளார் அன்னக்கிளி. சின்னமுத்துவின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் உடைந்து அழுதுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் என்ன காரணத்திற்காக அவர் இறந்தார் என்பது கூட தெரியவில்லை என்ற சூழ்நிலையில் இது குறித்து உரிய விசாரணை நடத்தி கணவரின் உடலை மீட்டு தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு அன்னக்கிளி கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற சின்ன முத்துவின் இந்த மரணம் தொடர்பாகவும், அவருடைய உடலை மீட்க போராடும் அன்னக்கிளியின் சோகநிலையும் கண்டு க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டி தன்னுடைய ஆதங்கத்தை தம்முடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

பெ.விருமாண்டி இயக்கத்தில் தமிழில் வெளியாகி இருந்த க.பெ. ரணசிங்கம் திரைப்படம், வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர் ஒருவருக்கு நேரும் மர்ம மரணம் மற்றும் கணவருடைய சடலத்தை தமிழ்நாட்டில் எளிய குடும்பத்தில் இருக்கும் மனைவி  ஒருவர் மிக்க முயலும் போராட்டத்தையும் வலுவாக சொல்லியிருந்தது. சர்வதேச அளவில் அதிக கவனம் ஈர்த்திருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், இயக்குனர் சண்முகம் முத்துசுவாமி வசனம் எழுதி இருந்தார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இயக்குனர் விருமாண்டி, க.பெ. ரணசிங்கம் படத்துடன் ஒப்பிட்டு  தம்முடைய கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த பேஸ்புக் பதிவில், "இன்னும் எத்தனை அரியநாச்சிகள் வேண்டும்.... இது போதாதா...? வெளிநாடு செல்லும் மக்களுக்கு  இனியாவது, இந்த அரசாங்கம்.. இருக்கும் ஒழுங்கு முறை அமைப்பை, ஒர்  வலியதாய்  மாற்றி அமைத்திடவேண்டும்..." என உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read | பிரபல அமெரிக்க ராப் பாடகருக்கு நேர்ந்த துயரம்!!.. துப்பாக்கியுடன் வந்த நபரால் பதைபதைப்பு சம்பவம்.!!

DIRECTOR VIRUMANDI POST, TAMILNADU WIFE, HUSBAND, KA PAE RANASINGAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்