"எல்லா உடல் நலக்குறைவுக்கும் காரணம் வெள்ளை சர்க்கரை தான்.. அதுல ஜாக்கிரதையா இருக்கனும்".. விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்குனர் வெற்றிமாறன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.

Advertising
>
Advertising

‘அசுரன்’, 'பாவக்கதைகள்' (ஆந்தாலஜி) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.

லாக்கப் நாவலை விசாரணை எனும் திரைப்படமாகவும், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாகவும் இயக்கிய இவர், எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து சூர்யா நடிப்பிலான வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார். முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் உருவாக்க முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியாகி,  ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதேபோல் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில் உள்ளன.

இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய வெற்றிமாறன் தன்னுடைய உதவி இயக்குனராக பணிபுரிந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்களிடையே உரையாற்றிய இயக்குனர் வெற்றிமாறன், “நாம் நிறைய டிரக்ஸ் பத்தி பேசுகிறோம். எப்பொழுதும் நாம் பேசாமல் விடும் டிரக்ஸ் வெள்ளை சர்க்கரை (Processed Sugar) . நமது உடலில் ஏற்படும் எல்லாவித உடல்நல குறைவுக்கு காரணம் வெள்ளை சர்க்கரை (Processed Sugar) தான் என்று நான் நினைக்கிறேன்.  அதை நம்மால் தவிர்க்க முடிந்தாலே போதும். எல்லா இடங்களிலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாம் என்ன உண்கிறோம் என்பது பற்றிய தெளிவு இருக்க வேண்டும்". என வெற்றிமாறன் பேசினார்.

VETRIMAARAN, PROCESSED SUGAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்