நடிகர் ராமதாஸ் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன்.. அழுத மகனின் கையை பிடித்து தேற்றி ஆறுதல்! உருக்கமான வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ஈ. ராமதாஸ் மறைவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
Also Read | துணிவு படத்தின் வெற்றி.. சொந்த ஊரில் இயக்குனர் வினோத் தந்தையை கௌரவித்த பிரபல தியேட்டர்!
விழுப்புரத்தைச் சேர்ந்த நடிகர் ராமதாஸ், ராஜா ராஜா தான், இராவணன், சுயம்வரம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.
ராமதாஸ், வசூல் ராஜா MBBS, காக்கிச் சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா, மாரி 2, மெட்ரோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
நடிகர் ராமதாஸ் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் திரையுலகப் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பேரரசு, மனோபாலா, மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இயக்குனர் வெற்றிமாறன், கே.கே. நகரில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு ராமதாஸ் மனைவி & மகன் கலைச் செல்வனின் கைகளை பிடித்து தேற்றி வெற்றிமாறன் ஆறுதல் கூறினார். இயக்குனர் சுப்ரமணிய சிவாவும் வெற்றிமாறனுடன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Also Read | அதிர்ச்சி.! பிரபல தமிழ் நடிகர் & இயக்குனர் ராமதாஸ் மாரடைப்பால் மரணம்..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எல்லா உடல் நலக்குறைவுக்கும் காரணம் வெள்ளை சர்க்கரை தான்.. அதுல ஜாக்கிரதையா இருக்கனும்".. விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்குனர் வெற்றிமாறன்!
- "மறையாத வலியாக இருக்கும்".. சண்டை பயிற்சியாளர் மரணம்.. ‘விடுதலை’ பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட இரங்கல்!!
- EXCLUSIVE: விடுதலை படப்பிடிப்பு இடைவேளையில் விபத்து.. உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர்.. நடந்தது என்ன..?
- மாவீரன் அலெக்சாண்டரை விட என்னிடம் படை பலம் அதிகம்..!- கடலூரில் பாமக நிறுவனர் காரசாரம்..!
- 'பாடநூல்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்'... 'அடையாளம் எங்கே'... ராமதாஸ் காட்டம்!
- 'இது தான் எங்களோட மாஸ்டர் ஸ்ட்ரோக்'... 'எங்களோட வெற்றி எப்படி இருக்கும்ன்னு மட்டும் பாருங்க'... டாக்டர் ராமதாஸ்!
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் 'ஒரு தலைக் காதல்'... மிகுந்த 'வேதனை' அளிப்பதாக 'விளக்கம்'... 'ஊடகங்கள்' புரிந்து கொள்ளுமாறு 'வேண்டுகோள்'...
- 'பின்பற்றுவது மார்க்ஸ் கொள்கைனா, பாஜகவோட கூட்டணி ஏன்?’.. பாமகவுக்கு கேள்வி!
- காடுவெட்டி குருவை நினைத்து மேடையில் கண்கலங்கிய ராமதாஸ்!