"என் மாணவன் சூரிக்கு வாழ்த்துக்கள்".. விடுதலை ரிலீஸ்.. இயக்குநர் சுசீந்திரன் நெகிழ்ச்சி பதிவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விடுதலை படம் ரிலீசாகி இருக்கும் இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூரிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

Advertising
>
Advertising

                Images are subject to © copyright to their respective owners.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது. விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தங்கம் எழுதிய வேங்கச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும்,  ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக்  கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். தங்கம் - வெற்றிமாறன் கூட்டுப் படைப்பாகிய இறைவன் மிகப் பெரியவன் கதைக்குத் திரைக்கதை, உரையாடல், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்று, அதை தற்போது இயக்குநர் அமீர் திரைப்படமாக்கி வருகிறார்.

விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் இன்று (மார்ச் 31) ரிலீசாகி இருக்கிறது. ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் இயக்குநர் சுசீந்திரன் நெகிழ்ச்சி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கைப்பட எழுதியுள்ள அந்த குறிப்பில்,"கதை நாயகனாக விடுதலை திரைப்படத்தின் மூலம் அடுத்த பரிமாணத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் என் மாணவன் சூரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIDUTHALAI, SOORI, SUSEENTHIRAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்