"அவரோட Career-லேயே பெஸ்ட் இதுதான்".. தசரா படம் பார்த்துட்டு ராஜமௌலி நெகிழ்ச்சி பதிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தசரா படம் குறித்து இயக்குநர் ராஜமௌலி, தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'. ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிப்பில் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் நானி & கீர்த்தி சுரேஷ் உடன் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தரணி எனும் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார். தசரா திரைப்படம், கடந்த 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியது. இந்தப் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுவருகிறது.
இந்த படத்தின் கதாநாயகன் நானி & கதாநாயகி கீர்த்தி சுரேஷ் இருவரும் ஐதராபாத் நகரில் உள்ள சுதர்சன் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகியது.
இந்த சூழ்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தசரா படம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில்,"கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் முரட்டுத்தனமான கதாபாத்திரங்களுக்கு மத்தியில், ஸ்ரீகாந்த் ஒடேலா ஒரு மென்மையான இதயத்தைத் தொடும் காதல் கதையை படமாக்கியிருக்கிறார். நானியின் கேரியர் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ். கீர்த்தி தன்னுடைய கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக ஒன்றியிருக்கிறார். ஒவ்வொரு நடிகரின் நடிப்பும் கவனிக்கத்தக்கது. முதல் தரமான ஒளிப்பதிவு. சிறப்பான பின்னணி இசை. வெற்றி பெற்ற தசரா குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்