"எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம்".. இயக்குநர் செல்வராகவனின் அட்வைஸ் பதிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இயக்குநர் செல்வராகவனின் சமீபத்திய ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன், தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அண்மையில் வெளியான பகாசுரன் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார்.
இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்திருந்தார். இதில், இயக்குநர் செல்வராகவன் முதன்மைக் கதாபாத்திரத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருந்தார்.
சமீப காலமாக செல்வராகவன் தனது வாழ்க்கை அனுபவங்களை பதிவுகளாக சோசியல் மீடியா பக்கங்களில் எழுதி வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்களுக்கு மத்தியில் அவ்வப்போது வைரலாகவும் செய்யும். அந்த வகையில் தற்போது செல்வராகவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்த பதிவில்,"உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதே இல்லை. எல்லாம் உங்களின் நம்பிக்கையை பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம். அதில் என்ன குறைந்து விடப் போகிறோம் ?" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ராம், ஆதிபகவான் எடுத்த அமீர் அண்ணா இந்துத்துவவாதியா?.. அமீரின் குற்றச்சாட்டுக்கு எதிராக Bakasuran மோகன்.ஜி பரபரப்பு பேட்டி..!
- Bakasuran : "அமிர் சாரிடமிருந்து இந்த கருத்தை எதிர்பார்க்கல.. பெரிய இயக்குனரே இப்படி சொல்வது வேதனையானது" - பகாசூரன் மோகன்.ஜி.!
- “குறிப்பா பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டுகிறது!” - ‘பகாசூரன்’ பட இயக்குநரையும் செல்வராகவனையும் பாராட்டி அன்புமணி ராமதாஸ் ட்வீட்.