"முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கையை Biopic -ஆ எடுக்கலாம்" - AR முருகதாஸ் சொன்ன காரணம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ் இதனை தொடர்ந்து விஜயகாந்தை வைத்து 'ரமணா' என்ற திரைப்படத்தையும், பின்னர் சூர்யாவை வைத்து கஜினி என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

                                                             Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்

அடுத்தடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நிறைய திரைப்படங்களை இயக்கி இருந்தார். தொடர்ந்து, நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என முருகதாஸ் இயக்கிய அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருந்தது.

மறுபக்கம் நிறைய திரைப்படங்களையும் தயாரித்து வந்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படம், கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இதன் பின்னர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Images are subject to © copyright to their respective owners

முதல்வரின் புகைப்பட கண்காட்சி

இதனிடையே, சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை இயக்குனர் முருகதாஸ் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மிகப்பெரிய தமிழ் இன தலைவரின் மகனாக இருந்த போதிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளார் என்பது தமிழகத்தில் பிறந்த அனைவருக்கும் தெரியும். நாம் அறிந்திருந்த அந்த விஷயத்தை தற்போது புகைப்பட கண்காட்சியில் பார்க்கும் போது அவருடன் பயணிக்கும் உணர்வை இந்த கண்காட்சி அளிக்கிறது. அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டாகிறது.

பயோபிக் எடுக்கலாம்..

தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த வரலாற்று பதிவை பார்த்து மகிழும்படி நான் வேண்டுகிறேன். முதல்வர் தனது தந்தை கருணாநிதி இறந்த பிறகு அவருக்காக எழுதிய கடிதத்தில், 'ஒவ்வொரு முறையும் உங்களை தலைவரே என்று அழைத்த நான் கடைசியாக ஒருமுறை அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா?' என்ற அந்த வரிகளை படிக்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.

Images are subject to © copyright to their respective owners

சிறிய வயதிலேயே இளைஞரணிக்கு பொறுப்பேற்று இருக்கிறார். ஒரு தலைவன் மகனாக இருந்தாலும் தனக்கான ஒரு போராட்டத்தை அமைத்து வெற்றி கண்டு மிகப்பெரிய இடத்தில் அமர்ந்திருக்கிறார். முதல்வரின் வரலாற்று பதிவுகளை ஒரு பயோபிக்காக இந்தியாவில் எடுக்க முடியும். அந்த அளவுக்கு மனதை பாதிக்கக்கூடிய பல்வேறு சம்பவங்கள் இதில் இருக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners

மிசா காலகட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அனுபவித்த போராட்டங்கள் மற்றும் இன்னல்களை பார்க்கும்போது ஒரு பயோபிக் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷன் ஆக இந்த கண்காட்சி அமைந்துள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

MKSTALIN, AR MURUGADOSS, BIOPIC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்