'அசுர வேகத்தில் வந்த பல்சர் 220 பைக்'...'பைக்கில் எழுதியிருந்த வாசகம்'...அதுபடியே நடந்த சோக முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிவேகத்தில் வந்த பல்சர் வாகனம் பனை மரத்தின் மீது மோதிய விபத்தில், டிப்ளமோ மாணவர் உயிரிழந்தார். பைக்கில் எழுதியிருந்த வாசகத்தின் படியே அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் புதுகுப்பத்தை சேர்ந்த ஆகாஷ்  என்ற மாணவன் தனது நண்பன் ஏகேஷை அழைத்துக்கொண்டு காலை கடலூர் நோக்கிச் சென்றுள்ளார். தனது பல்சர் 220 வாகனத்தில் அதிவேகத்தில் சென்ற அவர், தலைக்கவசமும் அணியவில்லை. இந்நிலையில் சின்னாண்டிக்குழி சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பனை மரத்தின் மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த நண்பர் ஏகேஷ் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான பல்சர் வாகனத்தின் பின்னால் “இந்த வேகம் ஒருநாள் என்னைக் கொல்லக்கூடும், யாரும் அழ வேண்டாம்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இறுதியில் அந்த வாசகத்தில் எழுதப்பட்டிருந்தது போலவே அவரது முடிவும் அமைந்தது தான் சோகத்தின் உச்சம்.

ACCIDENT, BIKE, CUDDALORE, PULSAR 220, DIPLOMA STUDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்