'அந்த ஒரு ஆசை மட்டும்'... 'லைஃப்ல நிறைவேறாமயே போயிடுச்சே'... 'எஸ்.பி.பி மறைவால் கலங்கிய'... 'தினேஷ் கார்த்திக் உருக்கமான பதிவு!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

'அந்த ஒரு ஆசை மட்டும்'... 'லைஃப்ல நிறைவேறாமயே போயிடுச்சே'... 'எஸ்.பி.பி மறைவால் கலங்கிய'... 'தினேஷ் கார்த்திக் உருக்கமான பதிவு!'...

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தொடர் சிகிச்சையால் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் இன்று மாரடைப்பால் காலமானார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருடைய மறைவிற்கு திரை உலகினர், கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Dinesh Karthik Mourns Death Of Singer SPB With Emotional Tweet

இந்நிலையில் எஸ்.பி.பி மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில், "நேற்றும் இன்றும் அடுத்தடுத்து இரங்கல் செய்திகள் வருகிறது. நேற்று இறந்த வர்ணனையாளார் டீன் ஜோன்சை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் அவருக்கு சாக கூடிய வயது கிடையாது. கிரிக்கெட் உலகின் மிக முக்கியமான, துள்ளலான நபர் நேற்று இறந்துவிட்டார். இன்றும் இன்னொரு துக்க செய்தி வந்துள்ளது.

எனக்கு விருப்பமான, மிகவும் பிடித்த கலைஞர் இன்று இறந்துவிட்டார். பாடகர் எஸ்.பி.பியை நான் கலைஞர் என்றுதான் குறிப்பிடுவேன். அவர் சிறந்த கலைஞர். இந்திய சினிமா உலகில் சிறந்த, பன்முகத்தன்மை கொண்ட பாடகர் நீங்கள். இந்த உலகம் உங்களை எப்போதும் நினைவில் வைத்து இருக்கும். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. நான் உங்கள் வீட்டிற்கு வந்த போது, நீங்கள் எனக்காக எனக்கு விருப்பமான பாடலை தனியாக பாடி காட்டினீர்கள். அந்த நாளை மறக்கவே மாட்டேன்.

எனக்கு அதேபோல் உங்களிடமிருந்து இன்னொரு முறை பாட்டு கேட்க வேண்டும் என ஆசை. ஆனால் அந்த ஆசை மட்டும் வாழ்நாள் முழுக்க எனக்கு நிறைவேறாத கனவாக இருக்க போகிறது. நீங்கள் இப்போது எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்" என மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் சார்பிலும் பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்