‘பாத்ரூம் கட்ட பக்கத்துவீட்டுக்காரர் எதிர்ப்பு’.. கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தாய்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கழிப்பறை கட்டுவதற்கு பக்கத்து வீட்டுக்காரர் எதிர்ப்பு தெரிவித்தால் 3 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் புளிய ராஜக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனம். இவர் தனது வீட்டின் அருகே புதிதாக ஒரு கழிப்பறை கட்ட முயன்றுள்ளார். ஆனால் அதற்கு தனத்தின் பக்கத்து வீட்டுக்காரர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இதுதொடர்பாக தனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று தனது 3 குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தனம் சென்றுள்ளார். அங்கு திடீரென குழந்தைகள் மற்றும் தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள், உடனே அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆசையா மோர் கொடுத்த மனைவி’.. ‘சுருண்டு விழுந்த கணவன்’ திருமணமான 9-வது நாளில் புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை..!
- 'இளம் பெண் மீது பலாத்கார முயற்சி'.. அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்தவர்களால், மேலும் நேர்ந்த கொடூரம்!
- 'அப்பா வாங்கிய கடன்'...'அம்மா'க்கு ஏன் கஷ்டம் கொடுக்கணும்'...'கல்யாண பெண்ணின் நெஞ்சை உருக்கும் சோகம்!
- 'சாலையை கடக்கும்போது'... 'நொடியில் தூக்கி வீசப்பட்டு'... 'மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்'... வீடியோ!
- 'ஃபாத்திமாவைத் தொடர்ந்து ஜெப்ரா பர்வீன்!'.. 'திருச்சி' கல்லூரியில் 'வெளிமாநில' மாணவிக்கு நேர்ந்த சோகம்!
- ‘அசந்து தூங்கிய தாயின் அலட்சியத்தால்’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..
- 'சுடிதார் பேண்டின் கயிறை கூட கட்ட தெரியாது'...'ஆனா தூக்கு கயிறு நெரிக்கும் போது'...தாய் கண்ணீர்!
- 'அவரு ஆண் இல்ல'.. 'மைனர் பெண்களை' மயக்கி.. வலையில் வீழ்த்திய 32 வயது பெண்.. கணவர் தற்கொலை!
- ‘100 வயதைக் கடந்தும் மாறாத அன்பு’... ‘கணவன்-மனைவிக்கு நேர்ந்த சோகம்’... ‘இணைபிரியா தம்பதியை நினைத்து’... ‘கண்ணீர் விட்ட உறவினர்கள்’!
- 'பின்னால் வந்த லாரி'...'திடீரென போட்ட சடன் பிரேக்'... கனநொடியில் நேர்ந்த பயங்கரம்!