'உண்மை தெரியாம இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே'... 'கோணலாக வரையப்பட்ட கோடு'...'அவசரப்பட்ட மீம்ஸ் கிரியேட்டர்ஸ்'... தெரியவந்த உண்மை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

‘யாருப்பா அந்த பெயிண்டர்’ என்ற தலைப்பில் இணையத்தில் பல மீம்ஸ்கள் பறந்தன.

பல நேரங்களில் உண்மை நிலவரம் தெரியாமல் ஷேர் செய்யப்படும் பதிவுகளின் உண்மை நிலவரங்கள் அது வைரலாகி பலரிடம் சென்று சேர்ந்த பிறகு தான் தெரிய வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் மணியக்காரன்பட்டி பகுதியில் சாலையோரம் கிடந்த தென்னை மட்டையை அப்புறப்படுத்தாமல் கோடு வரைந்துள்ளார்கள்.

இதையடுத்து ‘யாருப்பா அந்த பெயிண்டர்’ என்ற ரீதியில் மீம்ஸ்கள் பறந்தன. ஆனால் இந்தப் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை அறிந்ததில் அங்குள்ள குழியை மூடுவதற்குத் தென்னை ஓலை பயன்படுத்தப்பட்டதும் குழியைச் சுற்றிவளைத்து கோடு வரையப்பட்டதும் தெரியவந்தது. அந்த சாலை ஓரத்தில் காவிரி குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டு வால்வு அமைக்கச் சிறு தொட்டி கட்டப்பட்டிருந்ததும் தெரிந்தது.

இந்த சிறு தொட்டி சாலையோரம் இருப்பதால் இரவில் வாகனங்களில் வருபவர்களுக்குத் தெரிய அந்த இடத்தில் கோடு வளைந்து வரையப்பட்டிருந்தது. அப்போதும் சிறு சிறு விபத்துக்கள் நடந்ததால் பள்ளமான பகுதியில் தென்னை மட்டை வைத்துள்ளனர்.

ஆனால் இது எதுவும் தெரியாமல், அந்த வழியே சென்றவர் சாலையைப் புகைப்படம் எடுத்தபோது, சாலையோரம் கிடந்த தென்னை மட்டையை அப்புறப்படுத்தாமல் கோடு வரைந்துள்ளது போல் தெரிந்துள்ளது. இதை மீம்ஸ் ஆக்கி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

தென்னை மட்டை இல்லாமல் இருந்திருந்தால் புகைப்படத்தில் அங்கு உள்ள குடிநீர் வால்வுக்கென உருவாக்கப்பட் சிறு பள்ளம் தெரிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்