பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர்.. மகள் போல விருந்து அளித்த பெண் போலீஸ் அதிகாரி.. நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அசைவ உணவு அளித்து தீபாவளியை புதுமையான முறையில் கொண்டாடியுள்ளார் காவல் ஆய்வாளர் ஒருவர். அவருடைய இந்த முயற்சி பலரது கவனத்தை ஈர்த்திருப்பதோடு, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர்.. மகள் போல விருந்து அளித்த பெண் போலீஸ் அதிகாரி.. நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | சாலையில் கொட்டிய பண மழை.. தப்பிக்க முடியாதுன்னு திருடர்கள் செஞ்ச காரியம்.. உலக வைரல் வீடியோ..

இந்தியாவில் கடந்த 24 ஆம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்தும், பலவித உணவுகளை ருசித்தும், பட்டாசுகள் வெடித்தும் இந்த பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் ஆதரவற்ற, மாற்றுத் திறனாளி மக்களுக்கு அசைவ விருந்து அளித்து தீபாவளியை வித்தியாசமான முறையில் கொண்டாடி பலரையும் நெகிழ வைத்திருக்கிறார்.

Dindigul Police Inspector gave Feast to the Destitute peoples

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சண்முக லட்சுமி. குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் குணம் படைத்த இவர், ஆதரவற்ற எளிய மக்களிடம் அளவில்லா அன்பு காட்டவும் தவறுவது இல்லை என்கிறார்கள் உள்ளூர் மக்கள். அந்த வகையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு, ஜல்லிப்பட்டி மற்றும் சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் வசிக்கும் மையங்களுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி அவர்களுக்கு மட்டன் பிரியாணி மற்றும் இனிப்பு ஆகியவற்றை விருந்தாக அளித்திருக்கிறார்.

மேலும் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்ட அவர் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியும் சிரிக்கவும் செய்திருக்கிறார். பெற்ற பிள்ளைகளால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வேறு வழியின்றி முதியோர் இல்லத்தில் தவிக்கும் மக்கள் சண்முக லட்சுமி தயாள குணத்தை கண்டு மகிழ்ந்து போனதுடன், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் மையத்திற்கு சென்ற சண்முக லட்சுமி, அப்போது மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவருக்கு தாய் உள்ளத்தோடு உணவை ஊட்டி விட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் மையங்களுக்கு சென்று அவர்களுக்கு உணவு வழங்க ரூபாய் 35 ஆயிரம் ரூபாயை அவர் செலவழித்திருக்கிறார். அவர்களை மகிழ்விக்க காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி எடுத்த இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | 1947 முதல் இந்திய தலைவர்கள் குறித்து இருந்த கருத்து ... ஆனா இப்போ.. ஆனந்த் மஹிந்திரா போட்ட தரமான ட்வீட்..

DINDIGUL, POLICE INSPECTOR, PEOPLES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்