"கள்ளக்காதலியை சந்திக்கவாடா இதை செஞ்ச..." 'ஹாலிவுட்' வில்லன் ரேஞ்சுக்கு 'யோசித்த'... உள்ளூர் 'மன்மதன்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளக்காதலியை சந்திப்பதற்காக பொதுமக்கள் திசை திருப்ப நினைத்து மாங்காய் குடோனில் பெட்ரோல் குண்டு வீசிய கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சித்தரேவு சாலை பகுதியில் ரத்தினகுமார் என்பவரின் மாங்காய் குடோன் அமைந்துள்ளது. கடந்த 24-ம் தேதி, இவரது குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

திடீரென தீ விபத்து ஏற்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தவே இதுகுறித்து விசாரிக்குமாறு போலீசில் புகாரளித்தார் ரத்தினகுமார். புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணையில் இறங்கினர். தீ விபத்து நடந்த இடத்தில் கிடந்த பாட்டிலைக் கண்ட போலீசார்  சந்தேகமடைந்தனர். அதில், பெட்ரோல் வாங்கி வந்து குடோனில் வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சென்றது.

அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பாட்டிலுடன் ஒருவர் பெட்ரோல் வாங்க  வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர் யார் என விசாரித்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

விசாரணையில், பிடிபட்டவர் அய்யம்பாளையம் அழகர்பொட்டல் பகுதியை சேர்ந்த ராஜாங்கம் என்பது தெரியவந்தது. 24 வயதான அவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது. கடந்த 24ம் தேதி இரவு கள்ளக்காதலியை சந்திப்பதற்காக அய்யம்பாளையம் பகுதிக்கு சென்றுள்ளார்.  கிராமத்தினர் நடமாட்டம் அதிகம் காணப்பட்டதால், அவர்களை திசை திருப்ப திட்டம் தீட்டினார்.

ஒரு பாட்டிலை எடுத்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கினார். அதில் ஒரு துணியை திரியாக திரித்து தீயை பற்ற வைத்தார். அந்த சமயத்தில் அவர் கண்முன் பட்டது தான் மாங்காய் குடோன். அதன் மீது சற்றும் யோசிக்காமல் வீசினார். இதில் மாங்காய் குடோன் கொழுந்து விட்டு எரிந்தது. ஊர் மக்கள் அனைவரும் தீயை அணைக்க ஓடினர். ராஜாங்கம் மட்டும் கள்ளக்காதலியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். கள்ளக்காதலியுடன் ஒருநாள் இரவு தங்குவதற்காக ஊரையே திணறடித்த ராஜாங்கத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.

DINDIGUL, PETROL BOMBER, DETONATED, GODOWN, POLICE ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்