'தப்பான நட்பால வந்த அந்த பழக்கம்'... 'பிளைட் பிடிச்சு வந்து'... 'பாக்ஸிங் வீரர் ஊரில் பார்த்த வேலை'... 'வெளியான அதிரவைக்கும் பின்னணி!!!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வழிப்பறி கும்பலோடு சேர்ந்து கொள்ளையனாக மாறிய தங்கப்பதக்கம் வென்ற பாக்ஸிங் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், நிலக்கோட்டை டி.எஸ்.பி உத்தரவையடுத்து, சார்பு ஆய்வாளர் கண்ணா காந்தி தலைமையிலான தனிப்படை வழிப்பறி கும்பலை தீவிரமாக தேடி வந்துள்ளது. தொடர் தேடுதலுக்கு பிறகு வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட கதிரேசபிரபு, பாலமுருகன், அரசராஜன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களில் குல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மைக்ரோ பயாலஜி பட்டதாரி என்பதும், அவர் நாக்பூரில் பெற்றோருடன் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. அத்துடன் பாலமுருகன் தேசிய அளவில் பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பதும் கொரோனா காரணமாக குல்லிசெட்டிபட்டிக்கு திரும்பியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சொந்த ஊரில் தவறான நண்பர்களுடன் சேர்ந்து பாலமுருகன் கஞ்சா பழக்கத்து அடிமையானதும், அதன்காரணமாகவே நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா வாங்க தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் பகுதியில் திருடிய இரு சக்கர வாகனம் ஒன்றை 36 மணி நேரத்தில் நாக்பூருக்கு ஓட்டி சென்று அங்கு மறைத்துவிட்டு, அங்கிருந்து விமானத்தில் ஊருக்கு திரும்பி வந்து தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் பாலமுருகன் கூறியுள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 செல்போன்கள், ஒன்றரை பவுன் நகை மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்