’சானிடைசர் அடிக்க தான் வந்தாரு... ஆனா, அவர் இப்படி பண்ணுவாரு நினைக்கல...’ - தனியா இருந்த ‘மன நலம்’ பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றுபவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றுபவர் சக்திவேல். மேலமந்தை பகுதியில், வீடு வீடாக சென்று கிருமி நாசினி அடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் வெளியே கிருமிநாசினி தெளித்துக் கொண்டிருக்கும் போது, சக்திவேல் அந்த வீட்டிற்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

சிறுமி எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் வேறொரு அறையில் இருந்த பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்துள்ளனர். இதனை பார்த்த சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வத்தலக்குண்டு காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சக்திவேல் மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சக்திவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொரோனா கொடுமையே அடங்காத இந்த சூழலில் இது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்து அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்