வேட்டி கட்டுனா 'பிரியாணி' ஃப்ரீ... பிரபல கடையின் 'அசத்தல்' ஆபர்... விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக வேட்டி தினத்தை முன்னிட்டு வேட்டி கட்டி வரும் நபர்களுக்கு பிரியாணி இலவசம் என, சென்னையின் பிரபல பிரியாணி கடை அறிவித்துள்ளது.

வேட்டி கட்டுனா 'பிரியாணி' ஃப்ரீ... பிரபல கடையின் 'அசத்தல்' ஆபர்... விவரம் உள்ளே!

உலக வேட்டி தினம் வருகின்ற 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இளைஞர்களிடம் வேட்டி கட்டும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், கைத்தறி நெசவுத்தொழிலை காப்பாற்றும் விதமாகவும் வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் சென்னையை சேர்ந்த தொப்பி வாப்பா பிரியாணி கடை வேட்டி தினத்திற்கு இலவச பிரியாணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி அன்று (ஜனவரி 6) மதியம் 12 மணிக்கு வெள்ளை வேட்டி அணிந்து வரும் முதல் 50 நபர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்துள்ளது. மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் விதமாக, ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு கைத்தறி வேட்டி, துண்டு இலவசம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BIRYANI, DHOTIDAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்