"நாங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்.. ஆனா".. காதல் தம்பதி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்...பதறிப்போன பெற்றோர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தருமபுரியில் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "எனக்குன்னு இருந்தது அந்த வீடு மட்டும்தான் இப்போ அதுவும்".. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உருக்கம்..!

தர்மபுரி மாவட்டம், ஜிட்டாண்டஅள்ளி அருகேயுள்ள குளிக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தமிழரசு என்பவரும் கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தினந்தோறும் பேருந்தில் பயணிக்கும் வேளையில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த இளம் பெண்ணின் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

திருமணம்

இந்நிலையில், கடந்த வாரம் இளம்பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த இருவரும் அருகில் உள்ள கோவிலில் தங்களது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். அதன்படி கடந்த 7 ஆம் தேதி இருவரும் பாலக்கோடு அருகே உள்ள முருகன் கோவிலில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர்.

வாய்ஸ் மெசேஜ்

திருமணம் செய்துகொண்ட பின்னர் இருவரும் தங்களது பெற்றோருக்கு வாட்சப் மூலமாக வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியதாக சொல்லப்படுகிறது. அதில் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டதாகவும் இருவரும் உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனை கேட்ட இருவரின் பெற்றோரும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.

அதன் பின்னர், முருகன் கோவிலுக்கு விரைந்து சென்ற தம்பதியின் பெற்றோர், அங்கே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சோகம்

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இளம்பெண் மராணமடைந்திருக்கிறார். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழரசு சேர்க்கப்பட்டார். ஆனால், அவரும் துரதிருஷ்ட வசமாக நேற்று காலை உயிரிழந்திருக்கிறார். இதனால் இருவீட்டாரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தருமபுரியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி, தங்களது உயிரை மாய்த்துக்கொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Also Read | "அதிர்ஷ்டம் கூரை'ய பிச்சுக்கிட்டு தாறுமாறா குடுத்து இருக்கே.." 3 வாரத்துல ரெண்டு தடவ.. தமிழருக்கு துபாயில் அடித்த ஜாக்பாட்..

DHARMAPURI, COUPLES, MARRIED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்