அடர்ந்த வனப்பகுதி.. நடுவே அனாதையாக நின்ற கார்.. "பக்கத்துல இருந்த புதர்'ல.." திடுக்கிட வைத்த சம்பவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வனப்பகுதி ஒன்றில் கார் ஒன்று தனியாக நிற்க, அதனருகே கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

Advertising
>
Advertising

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த பூதனஹள்ளி என்னும் வனப்பகுதி அருகே கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது.

இந்த வனப்பகுதி மற்றும் கல் குவாரி அருகே, முழுவதும் மலை மற்றும் மரங்கள் நிறைந்திருக்கும் நிலையில், அங்கே கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுபவர்கள், கார் ஒன்று தனியாக நின்றதைக் கண்டுள்ளனர்.

தொடர்ந்து, அதன் அருகே, சுமார் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்களின் உடலும் கிடந்தததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். உடனடியாக, காவல் நிலையத்திற்கும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, இருவரின் உடலும் ஒரு புதருக்கு அருகே, சுமார் 10 மீட்டர் இடைவெளியில் கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது போக, அந்த உடல்களில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில், கேரள பதிவு எண் கொண்ட காரும் நின்றுள்ளது. அங்கே கிடந்த இரண்டு பேர் உடல்களில் சிறிதான காயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதிக ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில், இருவரது உடல் கிடந்ததால் அப்பகுதியினருடைய கடும் அதிர்ச்சி நிலவியது. மேலும், கார் மற்றும் இரண்டு உடல்கள் கிடந்த பகுதி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, மூன்று மொபைல் போன்கள், ஆதார் கார்டு உள்ளிட்டவை கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, அங்கே நின்ற காரின் பதிவு எண்ணைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் நிவில் ஜார்ஜ் ஆகியோர் தான் உயிரிழந்தார்கள் என்பது உறுதியானது.

இது தொடர்பாக, அவர்களின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மோப்ப நாய் கொண்டு அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, அது சிறிது தூரம் வரை சென்று விட்டு நின்று விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. விசாரணையில், சிவகுமார் மற்றும் நிவின் ஜார்ஜ் ஆகியோர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர், தருமபுரியில் உள்ள வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்தும் தீவிரமாக போலீசார் விசாரணை கொண்டு வருகின்றனர்.

CAR, FOREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்