‘144 தடை உத்தரவை மீறி’... ‘அசுரவேகத்தில் வந்த கார்’... ‘நொடியில் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’... ‘பதற வைக்கும் காட்சிகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்144 தடை உத்தரவை மீறி தருமபுரி அருகே வலம் வந்தவர்களை வழிமறித்த காவல் உதவி ஆய்வாளர் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடெங்கும் கொரோனா வைரஸால் முடக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அல்லும் பகலும் வேலைப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிச்சந்தை அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சாரதி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை சோதனை செய்வதற்காக வழிமறித்து உள்ளார். ஆனால் காரின் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் உதவி ஆய்வாளர் மீது மோதிவிட்டு அதிவேகத்துடன் அந்தக் கார் சென்றுவிட்டது.
இதனால் பதறிப்போன சக காவலர்கள் காரை துரத்தி சென்று மடக்கி பிடித்துள்ளனர். காரில் இருந்த 3 பேர் தப்பி ஓடிய நிலையில் காரை ஓட்டி வந்த பழனி என்பவர் கைது செய்யப்பட்டார். கார் மோதி பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தருமபுரியில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எனக்கு கொரோனா இருக்கு!’.. போலீஸாரின் மீது எச்சில் துப்பிய இளைஞர்.. கவலை தெரிவித்த உயர்காவல் அதிகாரி!
- 'கொரோனா வைரஸின் பிடியில் சிக்காமல்'... 'உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள நாடுகள் இவைகள் தான்'!
- “தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி!”.. “முதல் முறையாக அதிக எண்ணிக்கை!”.. பாதிக்கப்பட்டோர் 124 ஆக உயர்வு!
- ‘20 வருஷமா ராணுவத்துல இருக்காரு’.. ‘அவருக்கு இப்டி ஆனதை யாராலையும் தாங்கிக்க முடியல’.. கதறியழுத குடும்பம்..!
- 'லாக் டவுன் தொடருமா?'... ஏப்ரல் 14க்கு பிறகு என்ன செய்யப்போகிறது அரசு?... கொரோனாவை ஒழிக்க... ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!
- வெளில போய்ட்டு 'வீட்டுக்குள்ள' வர்றீங்களா?... கட்டாயம் இதெல்லாம் 'பாலோ' பண்ணுங்க!
- 1 ரூபாய்க்கு ‘சானிடைசர்’ பாக்கெட்.. அசத்திய பிரபல நிறுவனம்.. எங்கெல்லாம் கிடைக்கும்..?
- 'மச்சான் டயர் பஞ்சர் ஆயிடுச்சு'... 'பைக்கை ஓரமா ஒதுக்கு டா'... அடுத்த கணம் காத்திருந்த பயங்கரம்!
- 'வெளிநாடு சென்று வந்த ஊழியர்களை தனிமைப்படுத்தாமல்'... 'அப்படியே அனுமதித்த தனியார் நிறுவனம்’... ‘22 பேருக்கு கொரோனா பரவியதால்’... ‘சீல் வைத்த அதிகாரிகள்’!
- ஸ்மார்ட் போன்களில் 'கொரோனா' வைரஸ்... எத்தனை நாட்கள் 'உயிர்' வாழும்?... 'புதிய' தகவல்!