வேலை தேடுறவங்க இந்த தப்பை செய்யாதீங்க.. டிஜிபி சைலேந்திர பாபு கொடுத்த வார்னிங்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலைதேடும் இளைஞர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | சேப்பாக்கத்தில் Vibe ஆன விராட் கோலி.. ஸ்டெப் எல்லாம் தாறுமாறா இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

வேலை

பொதுவாக படித்து முடித்தவுடன் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதே பல மாணவர்களின் கனவாக இருக்கும். அதே நேரத்தில் படிப்பு முடிந்தவுடன் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் மாணவர்களிடையே சமீபத்தில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் இப்படி பல லட்சக்கணக்கான மாணவர்கள் ரயில்வே உள்ளிட்ட அரசு பணிகளில் சேர்வதையே வாழ்க்கை லட்சியமாக கொண்டு முயற்சி செய்தும் வருகின்றனர். ஆனால், சொற்ப எண்ணிக்கைக்கு இருக்கும் அதிகப்படியான போட்டி காரணமாக பலருக்கும் எளிதில் வேலை கிடைத்துவிடுவதில்லை.

இப்படியான நபர்களை குறிவைத்து சில மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது. பணம் கொடுத்தால் எளிதில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்த கும்பல் அப்பாவி மக்களை வலையில் வீழ்த்துகிறது. பணம் செலவானாலும் பரவாயில்லை, நல்ல வேலை கிடைத்தால் போதும் என கடன் வாங்கி அந்த மர்ம கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களை பற்றி நாம் தினந்தோறும் படித்துக்கொண்டே தான் இருக்கிறோம்.

Images are subject to © copyright to their respective owners.

ஆனாலும், புதுப்புது வழிகளில் இந்த கும்பல்கள் மக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார் அதில் ரயில்வே உள்ளிட்ட துறைகளில் வேலைதேடும் நபர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை அவர் விடுத்திருக்கிறார்.

எச்சரிக்கை

அந்த வீடியோவில் பேசும் அவர்,"பட்டதாரிகள், வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள்  மற்றும் அவர்களது பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி இது. வேலை வாங்கி தருவதாக கூறி, பணமும் வாங்கிட்டு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரையும் கொடுப்பாங்க. அதைக்கொண்டு நீங்க, வட இந்தியாவுல உள்ள ரயில்வே நிலையத்துல வேலைக்கு சேர முயற்சிக்கும் போது, உங்களை கைது செஞ்சிடுவாங்க.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்துல இப்படி நடந்தப்போ நாங்க தலையிட்டு உண்மையான குற்றவாளியை ஒப்படைச்சு அந்த நபரை மீட்டு கொண்டுவந்தோம். ரயில்வே மட்டும் அல்ல, மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி இப்படி மோசடி வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எந்த அரசு பணிக்கும் அதற்கென ஒரு தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலமாகவே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆகவே, யாரும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்" என தெரிவித்துள்ளார்.

Also Read | "நல்லா இருக்கேன்.. இன்னும் 2 நாள்ல டிஸ்சார்ஜ் ஆகிடுவேன்".. EVKS இளங்கோவன் வெளியிட்ட வீடியோ..!

DGP SYLENDRA BABU, YOUNGSTERS, RAILWAY JOB, RAILWAY JOB SCAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்