பதவிக்கு வந்த முதல் நாளே... அதிரடி காட்டிய டிஜிபி சைலேந்திர பாபு!.. கடுமையான சவால்!.. தரமான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக காவல்துறையின் டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திர பாபு, பதவியேற்ற முதல் நாளே அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளார்.

2019 மார்ச் முதல் ரயில்வே காவல்துறை டிஜிபியாகப் பணியாற்றி வந்த சைலேந்திர பாபு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று பதவியேற்றுக்கொண்டார். முந்தைய டிஜிபி திரிபாதி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, "தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக பணியாற்றுவது ஒரு அரிய சந்தர்ப்பம்" என கூறினார். மேலும், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட காவல் துறை தொடர்பான மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு முதலமைச்சருக்கு அறிக்கை அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளது சவாலான ஒரு காரியமாகும்.

இதற்கிடையே, இரண்டு ஆண்டுகளாக டிஜிபியாகப் பணியாற்றிய திரிபாதி ஓய்வு பெற்றதையடுத்து அவரையும், அவர் மனைவியையும் காரில் அமர்ந்திருக்க அவருடன் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் வடம்பிடித்து நுழைவாயில் வரை இழுத்துச் சென்று வழியனுப்பினர். மரபுப்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது இசைக்குழுவின் இசை முழங்கக் காவல்துறையினர் அணிவகுத்து நின்று வழியனுப்பினர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்