பிரசவ வலியில் துடித்த ஆதரவற்ற பெண்.. ஓடிச்சென்று பிரசவம் பார்த்த பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரசவ வலியில் துடித்த ஆதரவற்ற பெண்ணுக்கு பிரசவம் பார்த்து மருத்துவனைக்கு அனுப்பி வைத்த பெண் காவலருக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | யம்மாடி எவ்வளவு இருக்கு.. படையெடுத்த முதலைகள்.. உறையவைக்கும் வீடியோ.. அதிகாரிகள் கொடுத்த விளக்கம்..!

அதிர்ச்சி

வேலூர் மாநகரின் அண்ணா சாலையில் அமைந்துள்ளது தெற்கு காவல் நிலையம். இங்கே தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் இளவரசி. இவர் கடந்த 17-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பணியில் ஈடுபட்டிருந்த போது, காவல்நிலையத்தின் அருகே பெண்ணின் அழுகை குரல் கேட்டிருக்கிறது. இதனால் அதிர்ந்துபோன அவர் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, சாலை ஓரத்தில் சுமார் 35 வயதுள்ள பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக, உதவி ஆய்வாளர் பத்மநாபன், பெண் காவலர் சாந்தி ஆகியோரை அழைத்திருக்கிறார் இளவரசி. காவல்துறையினர் 108 ஆம்புலன்சிற்கு போன் செய்தனர். ஆனால் அதற்குள் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால், பெண் காவலர்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

பிரசவம்

அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அப்போது அங்கு வந்த ஆம்புலன்சில் தாய் மற்றும் சேயை ஏற்றி அருகில் உள்ள பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணுக்குத் தேவையான உதவிகளையும் தலைமை காவலர் இளவரசி உள்ளிட்ட காவலர்கள் செய்தனர். மேலும், அந்த பெண்ணுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் காவலர்களே வாங்கி கொடுத்திருக்கின்றனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருக்கின்றனர். இந்நிலையில், இளவரசி உள்ளிட்ட காவலர்களின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

பாராட்டு

அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் காவல்துறையினருக்கு தெரியவந்திருக்கிறது. திருமணம் செய்துகொண்டு ஏற்கனவே ஒரு மகன் இருக்கும் நிலையில் மீண்டும் பெண் கர்ப்பமடைந்த நேரத்தில் அவரது கணவர் சானு பிரிந்து சென்றிருக்கிறார். உறவினர்களும் தன்னை ஏற்றுக்கொள்ளாததால் சாலை ஓரத்தில் வசித்துவருவதாக கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் அந்தப் பெண்.

இந்நிலையில், சாலை ஓரத்தில் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு உதவி செய்த உதவி ஆய்வாளர் பத்மநாபன், பெண் தலைமை காவலர் இளவரசி, பெண் காவலர் சாந்தி ஆகியோரை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து, பாராட்டு சான்றிதழ் வழங்கி அவர்களது மனிதாபிமான செயலை பாராட்டியுள்ளார்.

Also Read | "பல வருஷமா இது நடந்திருக்கு".. 72 வயது பெண் வழக்கறிஞர் மீது வந்த சந்தேகம்.. இந்தியாவையே புரட்டிப்போட்ட சம்பவம்..!

POLICE, DGP, WOMAN CONSTABLE, DGP PRAISES WOMAN CONSTABLE, HELPS, PREGNANT LADY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்