பர்வத மலை போறப்போ அங்க நின்ன மரத்துல.. பக்தர்கள் கண்ட நடுங்க வைக்கும் காட்சி
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை: பர்வத மலையில் ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவரின் அழுகிய சடலம் மீட்க்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள்:
நாட்டில் கொரோனா ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒருபுறம் குற்றசெயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதைத் தவிர உறவு சிக்கல்கள், அது சார்ந்த வன்முறை, கள்ளத் தொடர்புகள், உறவுகளுக்கு இடையே மனக் கசப்புகள், மன அழுத்தம், நோய் என பலதரப்பட்ட பிரச்சனைகளை மனித சமூகம் எப்போதும் இல்லாத அளவிற்கு சந்தித்து வருகிறது. இத்தனை மன அழுத்தம் உயிர்க் கொல்லி நோய்களை உருவாக்கி உயிரை பறித்து செல்கிறது. சமீப நாட்களாக நிறைய இறப்பு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதில் கொலை, தற்கொலை உள்ளிட்டவைகளும் அடக்கம்.
வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பர்வதமலை கோவில் காணப்படும். பர்வதமலை மீது அமைந்துள்ள பிரம்மா அம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் சிவாலயத்துக்கு உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
மரத்தில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த இரு சடலங்கள்:
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை பர்வத மலை செல்லும் வழியில் மரம் ஒன்றில் ஒரு ஆண் மற்றும் பெண் சடலங்கள் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து இறங்கி வந்த பக்தர்கள் இந்த உடலை பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டு தூக்கில் தொங்கிய ஆண் சடலம் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளரான 46 வயது ராஜசேகர் என கண்டுபிடித்துள்ளனர்.
யார் இவர்கள்?
மேலும் இவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் பெண் சடலம் அவருடைய அச்சகத்தில் பணிபுரிந்த 24 வயதுப் பெண் தேவி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தீயாக பரவிய நிலையில் இருவருக்கும் கள்ளகாதல் இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
1945-ல் மாயமான விமானம்.. இத்தனை வருஷமா 'இங்க' தான் கெடந்துச்சா? வியக்க வைக்கும் ஆச்சரியம்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்