"பக்தர்கள் மீது தாக்குதல்"... "டோல்கேட் ஊழியர்கள் கைது"... "நடந்தது என்ன?"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் வழியாக நுழைந்த வாகனத்துக்கு இரட்டிப்பு கட்டணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், ஐயப்பசாமி பக்தர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று வந்துள்ளது. வாகன நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால், வேன் ஓட்டுனர் ஃபாஸ்டேக் பாதையில் வந்துள்ளார். வாகன நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஃபாஸ்டேக் பாதையைப் பயன்படுத்தியதால், இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சுங்கச்சாவடி ஊழியர்களால் ஐயப்ப பக்தர்கள் 3 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்களைக் கைது செய்யக்கோரி, ஐயப்ப பக்தர்கள் மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க திருமங்கலம் காவல் நிலைய போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தர்பார் படம் ஹிட் ஆகணும்’!.. ‘அலகு குத்தி’ ரசிகர்கள் வெறித்தனமான பிரார்த்தனை..! எந்த ஊர்ல தெரியுமா..?
- ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு... இவங்களுக்கு எல்லாம் அனுமதி இல்ல!
- ‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- VIDEO: டிரான்ஸ்பார்மரில் தற்கொலைக்கு முயன்ற 'ராணுவ வீரர்'.. நொடியில் நடந்த பயங்கரம்..! பரபரப்பு வீடியோ..!
- 'கவுன்சிலர் ஆன என்ஜினீயரிங் பட்டதாரி'... 'திடீரென சுவர் ஏறிக் குதித்து ஓட்டம்'... பரபரப்பு காரணம்!
- ஐயப்பனை தரிசிக்க... பேருந்தில் சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர்கள்... நடுவழியில் நடந்த பயங்கரம்... 18 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!
- 'அக்கா, தம்பி'யா பழகுறாங்கன்னு நினைச்சோம்'...'சிறுவன் கொடுத்த ட்விஸ்ட்'...அதிர்ந்து போன குடும்பம்!
- ‘ஆசை’ வார்த்தை கூறி ‘லட்சக்கணக்கில்’ மோசடி... ஏமாந்தவரிடம் ‘தானாக’ வந்து வசமாக ‘சிக்கிய’ நபர்...
- இந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்!
- 'பாக்க பணக்கார லுக்'...'நம்பி போன பட்டதாரிகள் '...வாழ்க்கையை காவு வாங்கிய இளைஞர்!