"கமலிடம் கதை சொன்ன தருணம்".. "அதிசயம் நடந்திருக்கு".. நெகிழ்ச்சியான பிரபல இளம் இயக்குனர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

STR48: நடிகர் சிம்பு & தயாரிப்பாளர் கமல்ஹாசன் இணையும் புதிய படம் குறித்து அதன் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கமல்ஹாசனை சந்தித்தது பற்றிய பதிவு வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த அறிவிப்பை சிலம்பரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து நடிகர் & தயாரிப்பாளர் கமல்ஹாசன், "சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார். மேலும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "என் வாழ்க்கையின் கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் மதிப்புமிக்க RKFI-ன் கீழ் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றதற்காகவும், அவருக்கு ஒரு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்ததும் ஒரு கனவு நனவாகும் தருணம்.. அதிசயங்கள் நடக்கின்றன." என பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்