'டேய் ஒரே ஒரு வாட்டி ஓட்ட கொடுடா'... 'காரை ஓட்ட கொடுக்க மறுத்த உறவினர்'... ஆத்திரத்தில் சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காரை ஓட்டிப்பார்க்கத் தராத ஆத்திரத்தில் கார் மீது பெட்ரோல் ஊற்றி உறவினர் ஒருவர் தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் வசித்து வருபவர் டோமினிக். இவரது மனைவி பிரின்ஜின், மகன் டார்வின். டோமினிக் பஜாஜ் அலைன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் ஆலோசகராக ஆக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக டோமினிக், கார் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது டோமினிக் மனைவியின் தம்பி மகனான ஜர்விஸ் காரில் ஏற ஆசைப்பட்டுள்ளார்.  ஆனால் டோமினிக்கின் மகன் டார்வின் நீ காரில் ஏற கூடாது எனக் கூறியுள்ளார்.

மேலும் ஜர்விஸ் காரை ஓட்ட கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கும் டார்வின் காரை கொடுக்க முடியாது எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரத்திலிருந்த ஜர்விஸ் கீழே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இதனால் டோமினிக் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மீது புகார் அளித்துள்ளார். இதனால் ஜர்வீசுக்கும், டார்வீனுக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் டோமினிக் வீட்டருகே காரில் நண்பர்களுடன் வந்தபோது, ஜர்விஸ் திடீரென்று மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பிறகு தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து டோமினிக்கின் கார் மீது ஊற்றிக் கொளுத்திவிட்டுத் தப்பியோடினார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் எரிந்து கொண்டிருந்த காரை உடனடியாக அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கப்பட்டு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரை ஓட்ட கொடுக்காத ஆத்திரத்தில் இளைஞர் காருக்கு தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்