ரத்தம் சரிந்த நாள்.. பகை வளரும்..'பழிக்குப்பழி' வாங்குவோம்.. 'பகிரங்க' போஸ்டர்களால் .. பரபரக்கும் நகரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் பிரவீன்குமார். இவர் மதுரை காமராசர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பைக்கில் வேகமாக சென்றதாகக் கூறி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பானடி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பலால் பிரவீன்  கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் பிரவீன்குமாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை ஒட்டி இந்த ஆண்டு அவருக்கு போஸ்டர்கள் அடிக்கப்பட்டு, அதற்கு மலர் மாலைகள், பூக்கள் தூவி மரியாதை செய்துள்ளனர். கல்லூரி உட்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ள வாசகங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அதில்,'' சிந்திய ரத்தம் வீண்போகாது. ரத்தம் சரிந்த நாள். பகை வளரும். பழிக்குப்பழி வாங்குவோம். எதிரியை வீழ்த்துவது உறுதி. பகைக்கு வயது ஒன்று. பலிக்குப்பலி தொடரும் போன்ற வாசகங்களை ஒட்டி எதிர்தரப்பை எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிரண்டு போயுள்ளனர்.

குறிப்பாக இந்த போஸ்டர்கள் காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள அழகர்கோவில் சாலையிலுள்ள சுவர்களிலும் இந்த எச்சரிக்கை அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. காவல்துறைக்கு அஞ்சாமல் இதுபோன்ற போஸ்டர் ஒட்டியுள்ளது காவல்துறைக்கு சவால் விடுவது போலுள்ளது. இந்த போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என்பது பற்றி தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்