நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள்.. 'புஷ்பா' ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகளுடன் வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், ஒரு பான்-இந்தியா திரைப்படம் என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்து அனைத்து எல்லைகளையும் உடைத்தது. ஒரு சாதாரண மனிதனை உலகளாவிய நாயகனாக இந்த கதை நிலை நிறுத்தியது. இப்போது, ’புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் இந்தியத் திரைப்படத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது.
#WhereIsPushpa? என்ற ஹேஷ்டேக்குடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கான்செப்ட் வீடியோவின் க்ளிம்ப்ஸை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து இரண்டாம் பாகத்தின் மீது ஆர்வமும், அடுத்தடுத்த அப்டேட் தொடர்பான கோரிக்கையும் வந்த வண்ணமே உள்ளது.
’புஷ்பா’ ஒரு திரைப்படம் என்பதைக் காட்டிலும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மூலம் மக்களின் குரலாக, ஒரு பாப்-கலாச்சாரமாக மாறியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் முதல் பிரபலங்கள், அரசியல்வாதிகள் வரை அனைவரும் மேடைகளில் ’புஷ்பா’ ரெஃபரன்சை பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் அவ்வப்போது புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ட்ரேட் மார்க் வசனங்களை ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தார்.
அதுமட்டும் அல்லாமல் மைதானத்திலும் சில நேரங்களில் புஷ்பா படத்தில் வருவது போல தாடையை தடவி போஸ் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு டேவிட் வார்னர் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் அல்லு அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் அவர் புஷ்பா இரண்டாம் பாகத்தினை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். இறுதியில் தனது மகளுடன் "ஹேப்பி பர்த்டே புஷ்பா" என்கிறார் வார்னர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவரு டீம்-ல இல்லாதது".. டெல்லி கேப்பிடல்சின் புது கேப்டன் வார்னர்.. ரிஷப் பண்ட் பற்றி உருக்கம்..!
- குடும்பத்துடன் பிரபல அரண்மனையில் தங்கியுள்ள அல்லு அர்ஜூன்.. ஒரு நாள் வாடகை மட்டும் இத்தனை லட்சமா? வைரல் போட்டோஸ்
- புஷ்பா - 2 ஷூட்டிங்குக்கு பிரேக்.. குடும்பத்துடன் புகழ் பெற்ற இந்திய காட்டில் அல்லு அர்ஜூன் சுற்றுலா!
- இரட்டை சதம் அடிச்சுட்டு துள்ளி குதிச்ச வார்னர்.. அடுத்த செகண்ட் நடந்த விபரீதம்.. சோகத்தில் ரசிகர்கள்.. வீடியோ..!
- BOXING DAY: கொளுத்தும் வெயில் & 155 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து.. அடுத்தடுத்து காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. பரபரப்பான சம்பவங்கள்!
- "எனக்கு கேப்டன் பதவியே வேண்டாம்.. அதைவிட குடும்பம் முக்கியம்".. ஆஸி . கிரிக்கெட் வாரியம் மீது வார்னர் கடும் தாக்கு..!
- "நான் ஒன்னும் கிரிமினல் இல்லை, இப்டி பண்றது".. மனம் உடைந்து பேசிய டேவிட் வார்னர்.. என்ன நடந்துச்சு?
- அவுட்டாகி வெளிய போன நேரத்தில்.. குட்டி ரசிகருக்கு டேவிட் வார்னர் கொடுத்த சர்ப்ரைஸ்.. மனம் உருகிய கிரிக்கெட் ரசிகர்கள்!!
- விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன டேவிட் வார்னர்.. "அவர் ஷேர் பண்ண ஃபோட்டோ தான் செம!!"
- "யாரும் இப்டி நடந்துருக்கும்'ன்னு நினைக்கல..." மைதானத்தில் வார்னர் செய்த மிரட்டல் சம்பவம்.. கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த வீடியோ