‘மகள்’ போடும் கோலத்தை ‘ரசித்துக்’ கொண்டிருந்தபோது... அதிவேகத்தில் ‘பெண்’ ஓட்டிவந்த காரால்... 'தாய்' கண்முன்னே நடந்தேறிய 'துக்கம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்த சிறுமி கார் மோதி தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கீழஉத்தரவீதியை சேர்ந்தவர் மாதவன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சொர்ணலட்சுமி. இவர்களின் மகள் தீப ரேகா (8). இவள் ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் தை வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை தாயும், மகளும் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்தனர்.
அப்போது சிறுமி தீபரேகா கோலம் போட, சொர்ண லட்சுமி அருகே நின்று மகள் கோலம் போடும் அழகை கண்டு ரசித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த கார், திடீரென சிறுமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதைப்பார்த்து சொர்ணலட்சுமி அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி தீபரேகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தான் அந்த காரை அதிகாலையில் வேகமாக ஓட்டி வந்தது தெரியவந்தது. தாய் கண் முன்னே சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘டூர் போன சென்னை இளைஞர்கள்’.. ‘திடீரென அறுந்து விழுந்த ராட்டினம்’.. பிரபல பூங்காவில் நடந்த விபத்து..!
- ‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..!
- ‘திடீரென’ சரிந்த மைதான மேற்கூரை... ‘நொடிகளில்’ மொத்தமாக இடிந்து விழுந்து... ‘இளைஞருக்கு’ நேர்ந்த சோகம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- தூரத்தில் ‘கண்ணீருடன்’ மகள்... ‘அணைக்க’ கூட முடியாமல்... பணிக்கு செல்லும் ‘தாய்’... ‘கலங்க’ வைக்கும் வீடியோ...
- 'காதலரை அறிவித்த பில் கேட்ஸ் மகள்!'... 'பில் கேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?'...
- ‘குடும்பத்துடன் டூர் போன தொழிலதிபர்’.. எதிர்பாராமல் நடந்த கோரவிபத்து.. கணவன், மனைவி அடுத்தடுத்து பலியான சோகம்..!
- ‘பள்ளியில்’ இருந்து வீடு திரும்பிய ‘15 வயது’ சிறுமி... ‘சீருடையுடன்’ செய்த காரியம்... ‘கலங்கி’ நிற்கும் ‘குடும்பத்தினர்’...
- ‘இளைஞரின்’ கை, கால்களை கட்டி... தாயும், சகோதரனும் சேர்ந்து... ‘ஆத்திரத்தில்’ செய்த ‘கொடூரம்’...
- விரைவில் ‘பறிக்கப்பட்ட’ மிக அழகான ‘ஆசீர்வாதங்கள்’... அது ஒன்றே ‘ஆறுதல்’... கணவர், மகளை இழந்து... ‘கலங்கும்’ கோபின் ‘மனைவி’...
- தொடர்ந்து ‘வற்புறுத்தி’ வந்த ‘பெற்றோர்’... மருத்துவமனையிலேயே ‘டாக்டர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...