‘அம்மாவுக்காக தான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்’!.. தாயை தூக்கிக்கொண்டு கலெக்டர் ஆபீஸ் வந்த இளம்பெண்.. வெளியான உருக்கமான பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தாயை தூக்கிக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு கொடுக்க இளம்பெண் வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் களப்பாடு கிராமத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் சிறுவயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நடக்க முடியாத அவர் தவழ்ந்துதான் மற்ற இடங்களுக்கு சென்று வருகிறார். தான் சிறு குழந்தையாக இருந்தபோது தாயின் நிலையைக் கண்டு மகள் சத்யா கலங்கியுள்ளார். இதனால் தனது 15 வயதிலிருந்து தற்போது வரை தாய் சண்முகப்பிரியாவை சத்யா தூக்கி சுமந்து வருகிறார்.

கடைவீதி, பேருந்து நிலையம் என எங்கு சென்றாலும் தனது தாயை சத்யா தூக்கிச் செல்கிறார். தாயை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனது திருமணத்தையும் சத்யா தள்ளிப்போட்டுக் கொண்டு இருக்கிறார். இதுகுறித்து தெரிவித்த மகள் சத்யா, ‘தூக்கிச் சுமக்கிறது கஷ்டமாக இல்லை. எனக்கு அப்புறம் அம்மாவை கவனிக்க யாருமில்லையே. அதனால்தான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறேன்’ என வேதனையுடம் கூறினார்.

மகள் குறித்து தெரிவித்த தாய் சண்முகப்பிரியா, ‘இப்படியொரு பிள்ளை எங்கேயுமே கிடைக்காது. அவள் எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கிறாள். என் பிள்ளைதான் எனக்கு எல்லாமே’ என உருக்கமாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு தாயை தூக்கிக்கொண்டு சத்யா வந்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, உடனே அவர்கள் இருந்த இடத்துக்கு நேரில் வந்தார். அப்போது, தனது தாயை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகள் சத்யா ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

இதனைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, உடனே இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். 40 வயது மதிக்கதக்க தனது தாயை தூக்கிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இளம்பெண் ஒருவர் வந்தது காண்போரை உருக வைத்துள்ளது.

News Credits: Puthiyathalaimurai

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்