'காற்றுக்கு பறந்த பேருந்து மேற்கூரை'... ‘ஆபத்தான பயணத்தால் அவதி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் வேகமாகப் பயணிக்கும் அரசுப் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து காற்றில் பறக்கும் வண்ணம் சென்றது.

ஓசூரில் இருந்து கெலமங்கலம் வழியாக அஞ்செட்டி துர்க்கம் வரை செல்லும் 12-ம் எண் கொண்ட அரசுப் பேருந்து நாள்தோறும் 20 முறைக்கும் மேல் அந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இப்பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து காற்றில் பறக்கும் காட்சிகளை பேருந்தின் பின்னால் காரில் சென்ற ஒருவர் தமது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

எந்த நேரத்திலும் மேற்கூரை பெயர்ந்து பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து நேரலாம் என்றும், அதற்குள் உடனடியாக பேருந்தின் மேற்கூரையை சீர்செய்ய வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

BUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்