'பேர கேட்டாலே அதிருது'!.. இந்த புயலுக்கு 'நிவர்'னு ஏன் பேரு வச்சாங்க?.. அப்படினா என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக்கடலில் மையம் கொண்டு அதி தீவிர புயலாக உருப்பெற்று சென்னைக்கும் கடலூருக்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கப்போகும் இந்த புயலுக்கு நிவர் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த புயலுக்கு நிவர் என பெயரிட்டிக்கும் நாடு ஈரான். இதேபோல, கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் கரையை கடந்த புயலுக்கு நிஷாக்ரா என பெயரிடப்பட்டது.
அந்த புயலுக்கு பெயரிட்டது வங்கதேசம். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு சோமாலியாவில் கரையை கடந்த கதி (GATI) புயலுக்கு அந்த பெயரை பரிந்துரை செய்த நாடு இந்தியா.
இப்படி பெயரிடும் வழக்கம் 2004-ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியது. உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் திகழ்கிறது.
ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ், அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.
பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை இந்த 13 நாடுகள்தான் வைக்கின்றன.
இந்த புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது, ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காணவும், மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளை துரிதமாக வழங்குவதை நோக்கமாகவும் கொண்டது.
சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பு மற்றும் வேறு சில வானிலை அமைப்புகள் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.
தற்போதைய புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த 'நிவர்' என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இரானிய மொழியில் 'நிவர்' என்றால் வெளிச்சம் என்று அர்த்தம். சுழற்சி முறையில் வரும் இந்த பெயர்களில் தமிழ் பெயரான முரசு இடம் பெற்றிருக்கிறது.
இது தமிழத்தில் வழக்கத்தில் உள்ள இசைக்கருவியின் பெயர். இதேபோல, நீர் என்ற தமிழ் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிவர் புயல் கரையை கடந்த பிறகும்'... '6 மணி நேரத்திற்கு பாதிப்பு!!!'... 'எந்தெந்த மாவட்டங்களில் தாக்கம் இருக்கும்???'...
- இந்த மாதிரி ‘இடத்துல’ எல்லாம் இறங்காதீங்க..! பாதுகாப்பு தான் முக்கியம்.. காவல்துறை அறிவுறுத்தல்..!
- ‘மணிக்கு 7 கி.மீட்டரில் இருந்து’... ‘11 கி.மீட்டராக அதிகரித்த வேகம்’... ‘எங்கெல்லாம் புயல் காற்று வீசக்கூடும்’... ‘வானிலை மையம் தகவல்’...!!!
- தயார் நிலையில் 'செம்பரம்பாக்கம் ஏரி'!.. 'இந்த' பகுதி மக்கள் எல்லாரும் தயவு செஞ்சு வெளியேறுங்க... அடையாறு ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!.. தமிழக அரசு அறிவிப்பு!
- வெளுத்து வாங்கும் ‘கனமழை’.. நிவர் புயல் எங்கே கரையை கடக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்..!
- எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்...? 'பேசாம இத பண்ணிடுவோம்...' 'நிவர் புயல் பயத்தில்...' - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயி செய்த காரியம்...!
- ‘மணிக்கு 5 கி.மீ. வேகத்தில்’... ‘மீண்டும் நகரத் துவங்கிய நிவர் புயல்’... ‘நாளை காலை அதிதீவிர புயலாக மாறும்’... ‘வானிலை மையம் தகவல்’...!!!
- 'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று!!!'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு???'... 'வெளியான முக்கிய அப்டேட்!'...
- செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்படுமா...? - தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தகவல்...!
- 3 மணிநேரம் நகராமல் இருந்த ‘நிவர் புயல்’.. என்ன காரணம்..? வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்..!