'வெளியேற்றப்படும் 1000 கன அடி நீர்'... 'செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 20 செ.மீ வரை மழை'... வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்தித் துறை தெரிவித்துள்ளது.
நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை அதிதீவிர புயலாகக் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 22 அடியை எட்டிய நிலையில், முதல்கட்டமாக 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஏரி திறக்கப்பட நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செம்பரம்பாக்கத்தில் ஒரே நாளில் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்தித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “செம்பரம்பாக்கம் பகுதியில் நாளை காலை 6 மணிக்குள் 15 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருக்கும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தொடரும் கன மழை'... 'தயாரான செம்பரம்பாக்கம் ஏரி'... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுப்பணித்துறை!
- வெளுத்து வாங்கும் ‘கனமழை’.. நிவர் புயல் எங்கே கரையை கடக்கும்..? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்..!
- நிவர் புயலால் ஏற்படும் ‘சூறாவளி’.. இந்த 9 மாவட்டங்களில் ‘அதிக சேதம்’ ஏற்பட வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..!
- ‘நிவர் புயல் சென்னையை தாக்குமா தாக்காதா?’.. இல்ல.. போற போக்குல ஒரு காட்டு காட்டுமா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‘அதிரடி’ பதில்!
- ‘மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க’.. நிவர் புயல் எதிரொலி.. முதல்வர் ‘முக்கிய’ அறிவிப்பு..!
- 'நிவர் புயலால்'... '7 மாவட்டங்களில் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று!!!'... 'எங்கெல்லாம் அதிகனமழைக்கு வாய்ப்பு???'... 'வெளியான முக்கிய அப்டேட்!'...
- செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்படுமா...? - தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தகவல்...!
- ‘தொடர் கனமழை’!.. செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன..? அதிகாரிகள் ‘முக்கிய’ தகவல்..!
- ஒருவேளை ‘நிவர் புயல்’ அங்க கரையை கடந்தா.. சென்னையில் ‘மிக’ கனமழை பெய்யும்.. வெதர்மேன் ‘முக்கிய’ தகவல்..!
- ‘வருது.. வருது.. விலகு.. விலகு!’.. 470 கி.மீ தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதால்.... ‘வானிலை மையம்’ முக்கிய ‘அப்டேட்!’