அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது புயலாக உருவெடுத்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை, வடக்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு கியார் (KYARR) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது, அடுத்த 24 மணி நேரத்தில், அதி தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. எனினும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
‘5 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய்’.. ‘படுக்கையறையில் வைத்த ரகசிய கேமராவால்’.. ‘சிக்கிய சென்னைப் பெண்’..
'FOOT BALL-லாம் தெரியாது'.. 'ஆனா எங்க ஆட்டம்'.. 'வெறித்தனமா இருக்கும்'.. வைரலாகும் யானைகள்.. வீடியோ!
தொடர்புடைய செய்திகள்
- ‘தீபாவளியன்று’.. ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘தீபாவளிக்கு சென்ற தம்பதி’.. ‘காவு வாங்கிய பள்ளம்' கணவர் கண்முன்னே பலியான மனைவி..! சென்னையில் மற்றொரு சோகம்..!
- ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. எந்தெந்த ஊர்காரங்க எங்கிருந்த பஸ் ஏறணும்..? விவரம் உள்ளே..!
- சென்னையில் உலா வந்த 'வெள்ளை காகம்'... ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்..! வைரல் வீடியோ
- ‘கில்லி படம் பாத்து... மிளகாய் பொடியோடு வந்தோம்’.. சென்னையை அதிர வைத்த சம்பவம்..!
- ‘அடுத்த 2 நாட்கள்’... சில இடங்களில் ‘மிதமான’ மழை... 11 மாவட்டங்களில் ‘கனமழை’!
- ‘அடுத்த 2 நாட்கள்’... ‘குறையும் மழை’... டெல்டா மாவட்டங்களில் ‘கனமழை’... வானிலை மையம் தகவல்!
- ‘பயணிகள் வசதிக்காக ஸ்மார்ட் வாட்ச்’.. ‘சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய ஐடியா’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'உங்க ஏரியாவில் மழையால் பவர்கட்டா?'... '24 மணிநேரமும் தடையின்றி’... ‘இந்த நம்பர்களில் புகார் தெரிவிக்கலாம்’... விவரம் உள்ளே!