‘அடுத்த 6 மணிநேரத்துக்கு கனமழை’.. வலுவிழந்த ‘புரெவி’ புயல்.. வானிலை மையம் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புரெவி புயல் காரணமாக அடுத்த 6 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் மன்னார் வளைகுடா பகுதி பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல் ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3 ஏற்றப்பட்டுள்ளது.
அடுத்த 6 மணிநேரத்துக்கு சென்னை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், காரைக்கால், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று (04.12.2020) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நள்ளிரவில் நரி ஊளையிட்டது.. ரயிலோடு, பாம்பன் பாலத்தையே கடல் அடிச்சுட்டு போச்சு".. 56 வருஷத்துக்கு முன் ராமேஸ்வரம் கோரப்புயலை நேரில் சந்தித்த ‘ஜெமினி - சாவித்ரி’யின் ‘திக் திக்’ அனுபவங்கள்!
- 'இந்த மாவட்டங்களில் எல்லாம் நாளை பொது விடுமுறை!!!'... 'புரெவி புயல் எதிரொலியாக தமிழக அரசு அறிவிப்பு!'...
- திரிகோணமலையில் கரையைக் கடந்தது! பாம்பனை நெருங்கும் புரெவி... காலை முதல் கொட்டித் தீர்க்கும் கனமழை!
- 'தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்!!!'... 'புரெவி புயலால்'... 'எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை???'... 'வெளியாகியுள்ள எச்சரிக்கை!'...
- ‘புரெவி புயல் தமிழகத்தின் எந்தப் பகுதியில்?’... ‘டிசம்பர் 4-ம் தேதி கரையை கடக்கக் கூடும்’.. ‘வானிலை மையம் தகவல்’...!!!
- புரெவி புயல் அப்டேட்: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது! 'மஞ்சள் அலெர்ட் விடுத்த வானிலை மையம்!'...
- 'நிவர் போனது!'.. புரவி வேகத்தில் வரும் புரெவி புயல்!.. திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது என தகவல்!
- 28 ஆண்டுகளுக்கு பிறகு 3 மாவட்டங்களுக்கு ‘புயல்’ எச்சரிக்கை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!
- 'உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்...' தமிழகத்தை புயல் தாக்க வாய்ப்புள்ளதா...? - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!
- 'தென் தமிழகத்தை நெருங்கும்’... ‘புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி’... 'எங்கெல்லாம் மழை பெய்யும்?’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...!